சொத்தின் மீதான அடமானம் கடன் புரிந்துகொள்ள வேண்டியது சொத்தை அடமானம் வச்சி கடன் வாங்கினேன் என்று சொல். நம் அன்றாட வாழ்வில் கேட்டு இருப்போம், போக்கியத்திற்கு விட்டு பணம் வாங்கினேன்! என்று காஞ்சிபுரம் திருவண்ணாமலை பகுதிகளில் சொல்வார்கள். பத்திரங்களில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு போக்கிய பத்திரம் என்றால் பதிவும் செய்து இருப்பார்கள். திருநெல்வேலி, மதுரை பக்கங்களில் ஒத்திக்கு விட்ருக்கேன் என்பார்கள் பத்திரங்களில் ஒத்திகைதொகை , ஒத்திகை கெடு , ஒத்திகை சொத்து, ஒத்திகை பத்திரம், என்றே குறிப்பிடுவார்கள். பலர் ஒத்தி , பேறு , போக்கியம் வேறு, அடமானம் வேறு, என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அனைத்தும் ஒன்று தான். இந்த அடமானம் நான்கு வகையாக நம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. அதனை பற்றி விரிவாக காண்போம். 1. சாதாரமான அடமானம் (SIMPLE MORTAGE) 2. சர்வாதின அடமானம் (MORTAGE WITH POSLO ) சாதாரண அடமானம் என்பது ! ஒரு தொகையை கடன் வாங்கும் போது தன் சொத்தை அடமானம் எழுதி கொடுத்து வாங்குவது அதில் மாதம்தோறும், அல்லது ஆண்டு தோறும், கொடுக்க வேண்டிய வட்டி, அசல் திருப்பி கொடுக்க வேண்டிய கெடு தேதி குறிப்ப...