முருகன் செய்த சூர வதம் (சூர சம்ஹாரம்) என்பதில் உள்ள சூரன்.சூரன் எனும் பதுமன் யார்?

 முருகன் செய்த சூர வதம் (சூர சம்ஹாரம்) என்பதில் உள்ள சூரன்.சூரன் எனும் பதுமன் யார்?

அழகான ராட்சசன் என்பதில் உள்ள ராட்சசன் யார்?

வாட்டாள் இரணியன் என்பதில் உள்ள இரணியன் யார்?

உண்மையில் நம்மீது படையெடுத்து வந்த பிற நாட்டவர்களுக்கு நம்மவர்கள்  வைத்த பெயர்கள்தான் இவை.

1800 ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் நுழைவுக்கும், படையெடுப்புக்கும் முன்பாக பத்து வெளிநாட்டினர் நம் மீது படையெடுத்துள்ளனர் என்பதை ஆய்வறிஞர் துடிசை கிழார். சிதம்பரனார் பட்டியலிட்டுள்ளார்.

முதல் படையெடுப்பாக வந்தவர்கள் ஆப்பிரிக்க தேசத்தினர். கருப்பின மக்கள். 

இவர்களையே திருபுராதிகள், ராக்கதர்கள் (ராட்சசர்கள்) என்று அழைத்துள்ளனர்.

இரண்டாம் படையெடுப்பாக வந்த சீன நாட்டின் மங்கோலியர்களையே, சூரன், பதுமன், தாருகன், சிங்கமுகன் என்று அழைத்துள்ளனர். (உடனே மங்கோலியர்கள் காலத்தில் முருகன் இருந்தாரா எனக் கேள்வி எழுவது இயல்பு. நம் மீது படையெடுத்தவர்களை அழைத்த பெயர்களில் அதுவும் ஒன்று எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்)

மூன்றாம் படையெடுப்பாக வந்த அமெரிக்க செவ்விந்தியர்களையே இரணியன், இரணியாக்கன் என்று அழைத்துள்ளனர்.

நான்காம் படையெடுப்பின்போது வந்தவர்களே ஆரியர்கள். (இவர்கள் பிராமணர்கள் அல்ல)

5 ம் படையெடுப்பு -கிரேக்கர்கள்

6 ம் - முகம்மதியர்கள்

7 ம் - டச்சுக்காரர்கள்

8 ம் - டேனிஷ்காரர்கள்

9 ம் - டோர்த்துக்கீசியர்கள்

10 ம் - பிரெஞ்சுக்காரர்கள்

11 ம் படையெடுப்பாக / ஊடுருவியர்களே பிரிட்டிஷ்காரர்கள்.

இத்தனை படையெடுப்பையும் கடந்து, தலை நிமிர்ந்து நிற்கும் உலகின் தொன்மையான, வலிமையான இனம் தமிழரினம்.

ஜி.யூ.போப் உள்ளிட்ட தமிழர்களின் பொதுக் குணங்கள் பற்றி ஆய்ந்தவர்கள், 

தமிழர்கள் என்பவர்கள்,

உற்சாகமானவர்கள்

தீவிரப் புத்தியுள்ளவர்கள்

கூர்ந்து நோக்கும் குணமுள்ளவர்கள்

சமன் செய்து சீர்தூக்கிப் பார்க்கக்கூடியவர்கள்

உற்று நோக்கக் கூடியவர்கள்

பெருந்தன்மை

சாந்த குணம்

தியாக குணம்

வாஞ்சை குணம்

புத்தி நுட்பம் கொண்டவர்கள்

என வெளிநாட்டினர் தமிழர்களைப் பற்றிய அளவீடுகளாகக் குறிப்பிட்டுள்ளனர் என சிதம்பரனார் குறிப்பிட்டுள்ளார்.

மேலோகம், கீலோகம் என்று வரலாற்று ஆவணங்களிலும், பேச்சு வழக்கிலும்,  கதைகளிலும் குறிப்பிட்டதற்குப் பொருள்  மேல் உலகம் என்றும் கீழ் உலகம் என்பது.

இன்று அதையே மேற்குலக நாடுகள், கிழக்கு நாடுகள் என்று அழைக்கிறோம்.

- வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?