Posts

Showing posts with the label INDIA

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி

Image
  நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி ரோஷினி அப்பா கணவருடன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், எச்சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம் உள்ள 51-ல் 47 சதவீத பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி மல்ஹோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார்.

பாவாணர் - திராவிடம்

Image
  கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது  உண்மையல்ல  !  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல்,  பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது  எனப் பட்டியலிடுகிறார். யாரெல்லாம் சூத்திரர் என  மனு  சாஸ்த்திரம் கூற வரும்போது: மனுதர்மம் பத்தாவது அத்தியாயம், -சுலோகம் 43-ல் பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள். சுலோகம் 44ல் பௌண்டரம் ஔண்டரம்  திரவிடம் காம்போசம் யவ நம் சகம் பாரதம் பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது! கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சிவஞான முனிவர் “எவ்வினையும் ஓப்புதலால...

அதானி வளர்ச்சி - ஓர் அலசல்

Image
அதானியின் கற்பனையில் உருவான செல்வம் அவரது உண்மையான செல்வத்தை உருவாக்கியது. அதானி தனது பங்கு விலையை முறைகேடான முறையில் உயர்த்தினார், இது அவரது நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை அதிகரித்தது, இது அவரது நிறுவனங்களை பெரிய கடன்களுக்கு தகுதியுடையதாக மாற்றியது. அதானியின் சொத்து அதிகரிப்பை 2014-ல் இருந்து கணக்கிடக்கூடாது, மாறாக நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்ட 13/09/2013 அன்றோ அல்லது மோடி முதல்வர் ஆனதில் இருந்தோ கணக்கிடப்பட வேண்டும். மோடி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நாள் வரை அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சுமார் 85 மடங்கு உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2.65 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அதானி இந்தியாவில் 22 வது இடத்தில் இருந்தார், மேலும் 2014 ஆம் ஆண்டில் அவர் 7.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 11 வது இடத்தைப் பிடித்தார். அவரது அனைத்து நிறுவனங்களின் லாபமும் எகிறவில்லை, ஆனால் பங்குகளின் விலை உயர்ந்துவிட்டன, இது நிறுவனத்தின் மதிப்பீட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது நிறுவனங்களுக்கு லாபத்திற்...

MEME SEP 3 23

Image
  சட்டம் தன் கடமையை செய்யும் (மா?)

இந்துத்துவம்

Image
  ஈழப்போரில் இறந்தவர்களில் அதிகம் இந்துக்கள் தான் இதை எந்த இந்துத்துவா காவலர்களும் தடுக்கவில்லை மாறாக படுகொலைக்கு காரணமானவர்களுக்க ஆதரவாகவே இருந்துள்ளனர். இந்துக்கள் இல்லை என்றால் இந்துமதம் இருக்க முடியாது தமிழர்கள் பின்பற்றும் இந்துமதம் இந்துத்துவா வாதிகளை நம்பி ஒருபோதும் இருந்ததில்லை.

இந்திய பாராளுமன்ற கட்டிடம்

Image
மோடி அரசு இப்போது கை கழுவி விட்டு செல்லும் இந்திய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் சர் எட்வர்ட் லுட்யன்ஸ் ஆல் வடிவமைக்க பட்டது. இதில் முக்கியமான விஷயம் . இது மத்திய பிரதேசம் மித்தோலி கிராமத்தில் இருக்கும் சவுசாத் யோகினி ஆலயம் என்ற இந்து கோவிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது. இந்து மதத்தை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இவ்வளவு தான். புதிய கட்டிட மாதிரியில் இப்படி எந்தவித அம்சமும் இல்லை. டிசைனர் குஜராத் மாநிலம் சேர்ந்தவர். என்ன ஒரு தாராளம். இன்றைய பாராளுமன்றம் நல்ல வலிமையாக உள்ளது. அதிகமாக உறுப்பினர்கள் இருக்க இடமில்லை என்பது போலியான வாதம். இவர்களுடைய உண்மையான நோக்கம் எல்லா விதத்திலும் தங்கள் அடையாளம் மற்றும் முத்திரை பதித்து வைப்பது தான். வெறும் ஆணவம். அதிகார போதை.

கேஷ் (Cash) - சொல்லின் மூலம்

Image
  கேஷ் (Cash) - என்ற சொல்லின் மூலம் தமிழா? பணத் தொகையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ' Cash ' - மட்டுமல்ல, நாணயத்தைக் குறித்த ' Coin ' - என்ற சொல்லும் தமிழ் மூலத்திலிருந்தே தோன்றியவையே! காசு  - என்ற சொல் எங்கிருந்து வந்தது? காய் /காய்ச்சுதல் - என்றால் உருக்குதல், வெப்பத்தால் இளக்குதல் என்று பொருள். காய்ச்சு = உலோகத்தைக் ' காய்ச்சி ' வடிவமைக்கப்பட்டது, செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய மாழையைக் காய்ச்சி உருவானது காசு. காய் > காய்ச்சு > காசு > CASH. காய் < COIN. துக்கடா  : உரு ' க்கிய  உரு வம் > காசு > உரு. உரு > உருவா > ரூபா > ரூபாய் > RUPEE. உரு + ஒக்கு +அம் > உருக்கம் > ரொக்கம்.