Posts

Showing posts with the label dravidam

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?

Image
சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் , " இப்போதைய நவீனக் கல்வியுடன் , சமஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக்கொண்டால் இன்னும் ஓர் தலைமுறைக்குள் ஹிந்து மதம் இப்பொழுது இருப்பது போல் இருக்காது . சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை . அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம் . சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் புகுத்துகிறோம் !"

திராவிடம் - பெரியார், meme

Image
 

பாவாணர் - திராவிடம்

Image
  கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது  உண்மையல்ல  !  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல்,  பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது  எனப் பட்டியலிடுகிறார். யாரெல்லாம் சூத்திரர் என  மனு  சாஸ்த்திரம் கூற வரும்போது: மனுதர்மம் பத்தாவது அத்தியாயம், -சுலோகம் 43-ல் பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள். சுலோகம் 44ல் பௌண்டரம் ஔண்டரம்  திரவிடம் காம்போசம் யவ நம் சகம் பாரதம் பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது! கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சிவஞான முனிவர் “எவ்வினையும் ஓப்புதலால...

திராவிடம், தமிழ்நாடு பெயர் குறித்து தந்தை பெரியார்

Image
  1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு “தமிழ் நாடு ” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.