பாவாணர் - திராவிடம்
கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது உண்மையல்ல ! திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல், பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனப் பட்டியலிடுகிறார்.
யாரெல்லாம் சூத்திரர் என மனு சாஸ்த்திரம் கூற வரும்போது:
மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,
-சுலோகம் 43-ல்
பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.
சுலோகம் 44ல்
பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்
காம்போசம் யவ நம் சகம் பாரதம்
பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்
இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்
மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!
கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவர்
“எவ்வினையும் ஓப்புதலால்
திராவிடம் என்றியல் பாடை” எனப் பாடியுள்ளார் !
Comments
Post a Comment