திராவிடம், தமிழ்நாடு பெயர் குறித்து தந்தை பெரியார்
1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு “தமிழ் நாடு ” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.