சிப்பாய் புரட்சி
1805இல், வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும். ஏன் நடந்தது என்று தெரியுமா?
1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது.
இதை படிக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் ஹிபாப் பிரச்சனை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
நம்புங்க. அது வேற, இது வேற.
#historyrepeats
Comments
Post a Comment