நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி

 நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி

ரோஷினி அப்பா கணவருடன்

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், எச்சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம் உள்ள 51-ல் 47 சதவீத பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி மல்ஹோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார்.

கடந்த 6-ம் தேதி பதிவு செய்யப்பட்ட தான பத்திரம், 7-ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் எச்சிஎல் குழுமத்தைச் சேர்ந்த எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 முக்கிய நிறுவனங்கள் இவரது கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

இதற்கு முன்பு மேற்கண்ட இரு நிறுவனங்களிலும் ஷிவ் நாடாருக்கு 51% பங்குகளும் ரோஷினிக்கு 10.33% பங்குகளும் இருந்தன. இப்போது ரோஷினியின் பங்குகள் 57.33% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் ஷிவ் நாடாரின் பங்குகள் வெறும் 4% ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் எச்சிஎல் குழுமத்தில் அதிக பங்குகளைக் கொண்டவராக ரோஷினி உருவெடுத்துள்ளார்.

இந்த ஏற்பாடு, எச்சிஎல் குழுமத்தில் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வாரிசு ஒப்படைப்பு திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். பங்குகளை ரோஷினிக்கு சுமுகமாக மாற்ற இந்திய பங்குச் சந்தை வாரியம் வெளிப்படையான பங்கு விற்பனை (Opend Offer) முறையில் இருந்து விலக்கு அளித்தது.

மேலும் இந்த பங்கு பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரராகவும் ரோஷினி உருவெடுத்துள்ளார். ரூ.7.66 லட்சம் கோடி சொத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்திலும் ரூ.5.99 லட்சம் கோடி சொத்துடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரூ.3.12 லட்சம் கோடி சொத்துடன் ரோஷினி 3-ம் இடம் பிடித்துள்ளார்.

தனது தந்தையின் பங்குகள் பரிமாற்றம் காரணமாக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரோஷினி 3-ம் இடம் பிடித்தார்...!



Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?

ARAVA NADU - ETYMOLOGY