இந்தியா ஏன் சீனாவை எதிரி நாடாக பார்க்க வேண்டும்?

சற்று நீண்ட பதிவு. மன்னிக்கவும் ஆனால் நிச்சயம் படிக்கவும்.

துல்லியமான செய்திகளை கூறுகிறார். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு சில நேரத்தில் be positive என்ற கோணத்தில் சில உண்மைகளை தவிர்த்து விடுகிறார். 

குறிப்பாக இந்தியா இஸ்ரேல், வெளியுறவு கொள்கைகள், பாகிஸ்தான் சீன  நாடுகளை இந்தியாவின் எதிரி கண்ணோட்டம், அவருடைய பெரும்பாலான காணொளிகளில் மேம்பட்டு தெரிகிறது. 

ஆசியாவில் இருக்கும் நாடுகள் அனைத்தும் இந்தியாவை மேற்கத்திய நாடுகளின் கைக்கூலியாக தான் பார்க்கின்றனர். 

இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் அதிகம் நம்பி உள்ளன.

இது எந்த அளவுக்கு நன்மையோ அதே அளவிற்கு தீமையும் கூட. ஏனென்றால் மேற்கத்திய நாடுகள் அவர்களுடைய சுயலாபத்திற்காக எந்த அளவிற்கும் செல்வர் என்பதை உலக வரலாற்றுப் பதிவுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு காணொளியில் அவர் இஸ்ரேல் இந்தியாவிற்கு நட்பு நாடாக ஏற்றுக் கொள்கிறார். சீனாவை எதிர்ப்பதற்கு அது உதவும் என்று நம்பும் அதேவேளையில், நேற்று நீங்கள் பதிவிட்ட let's be a responsible citizen என்று அறைகூவல் விடுக்கும் காணொளியில் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் இந்தியாவில் நடக்கும் Corona death வைத்து அவர்களுடைய செய்தி ஊடகங்களின் மூலம் இந்தியாவின் இமேஜை காயப்படுத்தினர், என்பது பற்றியும் அதற்கு ஜெய்சங்கர் கொடுத்த பதிலடி பற்றியும் விளக்கிக் கூறி இருந்தார்.

இதுதான் மேற்கத்திய நாடுகள் உறவின் பலன் என்பதை அவர் புரிந்து கொண்டும் அதை தெரிவிக்காமல் தவிர்க்கிறார்.

மேற்கத்திய நாடுகள் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் குணம் கொண்டவை.  அவர்களுக்கு லாபம் இன்றி எந்த ஒரு விஷயத்தையும் செய்யமாட்டார்கள்.

இந்தியா, சீனா பாகிஸ்தான் மற்றும் பிற ஆசிய நாடுகளிடம் சுமூக உறவு இல்லாததற்கு காரணமே இந்த மேற்கத்திய நாடுகள் தான்.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகள், தங்களை நல்லவன் போல் வெளியே காட்டிக் கொண்டு எல்லாவிதமான திருட்டுத்தனகளையும் செய்யும் நாடுகள்தான். 

சூழ்ச்சிகளில் அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை.

உலகத்தில் அவர்களுடைய ஆதிக்கம் நிலைத்திருக்க இந்தியாவை தங்களுடன் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு உண்டு. 

ஆகையால் அவர்கள் சீனாவையும் பாகிஸ்தானையும் எப்போதும் இந்தியாவை எதிர்த்து சீண்டும் அளவிற்கு தான் உறவை வைத்துக் கொண்டிருப்பர்.

சீனாவை எதிரி நாடு என்று நம்மை பார்க்க வைக்கும் இந்த ஊடகங்கள் எவ்வளவு பாடு படுகின்றன என்பது கண்கூடு. 

சற்று நாம் வித்தியாசமாக சிந்திப்போமா? 

நான் எப்போதும் கூறியது போன்று எல்லா விஷயங்களிலும் இரு பக்கங்கள் உள்ளன.

சீனாவில் இன்னொரு முகம் நாம் பார்க்க மறுக்கிறோம் அல்லது தவிர்க்கிறோம்.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளை மூன்றாம் மற்றும் இரண்டாம் தர நாடுகளாக தான் மதிக்கின்றனர்.

ஆனால் சீனா இந்தியாவைப் போன்றே எந்த நாடுகளையும் ஆக்கிரமிப்பு அல்லது அடிமைப்படுத்தியோ அல்லது போர் விமானங்கள் கொண்டு குண்டு தாக்கியே தன்னிச்சையாக நடந்து கொண்டது கிடையாது. அடிமை படுத்தியதும் இல்லை. பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் பெரும் நிதி நிதி உதவி அளித்து கொண்டுள்ளது உலகம் அறிந்த உண்மை. ஆனால் அவ்வாறு நிதி கொடுத்த எந்த நாடுகளையும் அவர்கள் கீழ்த்தனமாக இரண்டாம் தரமாக இதுவரையில் நடத்தியது இல்லை. அந்த நாடுகளை தங்களின் அடிமையாக நடத்தியதும் இல்லை.

ஹாங்காங் தாய்வான் போன்ற சில பிரச்சினைகள் இருப்பது உண்மையே.

இந்தியா எப்படி காஷ்மீரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறதோ, அதேபோல் தாய்வான் தனிநாடாக  விட்டுக்கொடுக்க சீனா மறுப்பது, அவர்களுக்கு இருக்கும் உரிமை.

காஷ்மீரில் இருக்கும் மக்கள் எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாம் தனி நாடாக பிரித்து விடுங்கள் என்று கேட்டால், இந்தியா அதற்கு ஒத்துக் கொள்ளுமா? பிரித்து கொடுத்து விடுமா? இதைப்போன்ற ஒரு சிக்கல்தான் தாய்வான் சீனா பிரச்சனை.

எப்படி காஷ்மீரை ஒருபோதும் இந்தியா விட்டுக் கொடுக்காதோ, அதேபோல் தாய்வானை சீனா விட்டுக்கொடுகாது, அதை நிர்ப்பந்திக்க எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.

ஹாங்காங் விஷயத்திலும், மேற்கத்திய நாடுகள் நாடகம்  ஆடுகின்றனர்.. சீனாவின் பாகமாக இருந்த ஹாங்காங்கை ஒப்பந்தத்தின் மூலம் இத்தனை ஆண்டுகள் அவர்கள் தனிநாடாக இருக்க சீனா சம்மதித்தது. அதன்படி அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் இப்போது ஆங்காங் சீனாவின் பிரதேசமாக ஆகிவிட்டது. இதுவரையில் மேற்கத்திய நாடுகளில் கை ஓங்கியிருந்த ஹாங்காங்கில் சீனா ஆதிக்கம் செலுத்த நினைப்பது தவறு என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இதையே காரணம் கூறி அங்கு கலவரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தங்களுடைய பிரதேசமாக ஆகிவிட்ட ஹாங்காங் சீனா இதை செய்யக் கூடாது அதை செய்யக்கூடாது என்று கூற எந்த நாட்டுக்கும் எந்த தகுதியும் இல்லை. ஹாங்காங் உட்பட.

ஹாங்காங் சீனாவிடம் இருக்க விருப்பமில்லை எனில் அதை பேச்சுவார்த்தையின் மூலம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர கலவரங்களின் மூலம் விடைகாண முடியாது மேற்கத்திய நாடுகள் இந்தப் பிரச்சினையை வைத்து சீனாவிற்கு கெட்ட இமேஜை உருவாக்க முயற்சிக்கின்றன என்பது தெள்ளத் தெளிவு.

அவர்கள் உண்மையாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் நிச்சயம் அவர்களால் அந்த தீர்வை நோக்கி நகர்த்த முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவே மாட்டார்கள் அங்கு அமைதி திரும்ப விடமாட்டார்கள்.

இப்படி இரட்டைவேடம் ஆடிக்கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளை இந்தியா நம்பிக் கொண்டிருக்கும் வரை ஆசிய கண்டத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மான சுமூக உறவு ஏற்படாது.

சீனாவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும், சீனா இந்தியா கூட்டணி அழிக்க முடியாத பேராற்றல் மிக்க கூட்டணியாக அமையும். ரஷ்யா என்றுமே சீனாவுக்கு நண்பனாக தான் இருக்கும். இந்தியாவையும் அதன் நட்பு நாடாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்தியா ரஷ்யா சீனா ஒன்று சேர்ந்தால் உலகத்தின் மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும். அந்த கூட்டணி அமையாமல் இருக்க மேற்கத்திய நாடுகள் நிச்சயம் அதனால் முடிந்த எந்த சதியையும் பிண்ணி கொண்டிருப்பர். 

சீனாவின் மீது அவர்கள் வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு பயோ வார் போன்ற நோய்க்கிருமிகளை சீனா பரப்புகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

 Wuhan lab அந்த ஆராய்ச்சி தொடங்குவதற்கு முன்னர் அதே ஆராய்ச்சி arizona மாவட்டத்தில் அமெரிக்கா நடத்தி கொண்டிருந்தது ஒன்றுதான். ArizonA மாகாணத்தில், உள்ளூர் வாசிகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அந்த ஆராய்ச்சியை கை விடாமல், அதே ஆராய்ச்சியை, சீனாவில் wuhan இல், அமெரிக்க அரசு ஒப்பந்தத்தில் சீனாவில் நடைபெற்று கொண்டிருந்தது. இதை fauzi, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உண்மையா என்று கேட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்தார்.

அந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா சீனாவுக்கு பண உதவி புரிந்து கொண்டிருந்தது என்றும் கூறுகின்றார். ஆகையால்தான் அமெரிக்கா உட்பட WHO நிறுவனங்கள் சீனாவை இவ்விஷயத்தில் பணிய வைக்க முடியவில்லை, என்பதுதான் உண்மை.

சீனா தன்னிச்சையாக இந்த பயோ வார் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. இது நிச்சயமாக உலக வல்லரசின் கூட்டுசதி ஆகத்தான் இருக்க வேண்டும் அல்லது அவர்களுக்கே தெரியாமல் பயங்கரவாத செயலாக அமைந்து இருக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

இந்த விஷயங்கள் நிச்சயமாக திரு சுரேஷ் அவர்களுக்கு தெரிந்து இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அவற்றை தர மறுப்பது சற்று விந்தையாக உள்ளது.

இவரும் main stream மீடியாக்கள் போல தான் முன்னுக்கு பின் முரணாக பேசிக்கொண்டு இருக்கிறாரோ என்று சந்தேகம் வலுக்கிறது.

இவ்வளவு சதியையும் புரிந்து கொண்டும், அதை சாத்திய படுத்த விடாமல் இருப்பதற்கும் காரணம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், ஆரிய பிராமண சூழிச்சி தான். மேற்கத்திய கைக்கூலிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசாங்கங்கள் இந்தியாவில் இருக்கும் வரை இந்தியாவின் எந்த ஒரு பிரச்சனையும் முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை முடிவுக்கு வரவும் விட மாட்டார்கள். இது நிதர்சனமான மற்றும் கசப்பான உண்மை

பிரச்சனைகளை திசைதிருப்பி இந்தியாவை வளரவிடாமல் அதன் வளர்ச்சியையும் தடுக்க முடியாமல் இரட்டை வேடம் இட்டு கொண்டு இந்தியர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டு தான் இருப்பர்

இந்திய வல்லரசு கனவு இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளாக பலரால் முன்னெடுக்கப்பட்டு இன்றளவும் எங்கு ஆரம்பித்தோமோ அங்கேயே தான் நின்று கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் நான் மேல் கூறிய மேற்கத்திய நாடுகளின் சதியும் அதற்கு ஒத்துழைத்து கொண்டிருக்கும் இந்தியாவின் அதிகார வர்க்கமும் தான்.

இதையெல்லாம் படித்து விட்ட பின்னர், ஒருசிலருக்கு சீனாவுடன் சுமூக உறவா? என்ன விளையாடுறீங்களா, ஜோக் அடிக்கிறீர்களா? என்ற எண்ணம் தோன்றலாம். அது சாத்தியமா என்றும் தோன்றலாம்

அது நிச்சயம் சாத்தியமே

திரு சுரேஷ் அவர்கள் கூறியதைப் போன்று இதற்கு நிறைய சான்றுகள் நமது பண்டைய நாகரிகத்தில் முக்கியமாக தமிழர் நாகரிகத்தில் சாத்தியம் என்பதற்கான சாட்சிகள் உள்ளன.

தமிழ் அரசர்களுக்கும் சீன அரசுகளுக்கும் இடையே வணிக தொடர்புகள் இருந்தன என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இங்கிருந்து சென்ற போதிதர்மர் அதற்கு ஒரு சான்று.

அக்காலகட்டத்தில் சீனாவில் இருந்து நிறைய ஆன்றோர் சான்றோர் இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர் என்பது வரலாற்றுப் பதிவு.

சீனா மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட இதே தொடர்பு இருந்து வந்திருக்கின்றன. ஆனால் அது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்புகளை விட குறைவாகத்தான் உள்ளது.

இதற்கு சான்றாக இன்றும் சீனாவில் நிறைய இடத்தில் தமிழ் கல்வெட்டுகளும் தமிழ் கலாச்சாரம் பரவியுள்ளதை வரலாற்று பதிவுகளில் காண முடிகிறது. இன்றளவும் தாய்வான் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வ குடியினர் கலாச்சாரமும் தமிழ் கலாச்சாரம்  நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பானிலும் கொரியாவிலும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்று பல வரலாற்றுப் பதிவுகள் இன்று மீட்டெடுக்க பட்டுள்ளன.

ஆகையால் சீன இந்திய உறவு என்பது இன்று அல்ல நேற்று அல்ல பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆகையால் இது சாத்தியமற்றது என்று ஒதுக்க முடியாது.

இவ்வளவு ஒற்றுமைகள் இவ்வளவு போக்குவரத்துகள் இருந்து கொண்டிருந்த பிரதேசத்தில் அப்படி ஒன்றும் பெரிய பகை இருந்ததாக வரலாற்றில் எந்தப் பதிவும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது இந்திய-சீன பகை எவ்வாறு எந்த காலகட்டத்தில் உருவாகியுள்ளது என்பதை பார்ப்போமானால் அது நிச்சயம் ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னர்தான் என்பதையும் வரலாற்று பதிவுகளில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தி இந்தியர்கள் அவர்களுடைய சுயரூபத்தை புரிந்து கொள்ள விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது இந்த ஆரிய பிராமண ஆட்சியாளர்கள் தான். ஆகையால்தான் அவர்கள் இன்றளவும் இஸ்ரேல் தொடர்பை வரவேற்று ஊக்கப்படுத்தியும் வருகின்றனர்.

மேற்கூறிய செய்திகள் எந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவும் நமக்கு தெரியப்படுத்த முயற்சிக்கவே முயற்சிக்காதே என்பது தான் உண்மை.

திரு சுரேஷ் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல என்பது அவருடைய சில பதிவுகளில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு இந்த பதிவையே பாருங்கள் சீனாவை ஒரு விரோத நாடாகத்தான் உருவகப்படுத்தி இந்த கட்டுரை எழுதி இருக்கிறார்கள் பாருங்கள்.

அந்தக் கட்டுரையின் கடைசியில் சீனாவை பற்றி குறிப்பிடும்போது ராணுவ தாக்குதலுக்கு மட்டுமின்றி அதைவிட மோசமான சீனர்களின் கைவந்த கலையான கலாச்சார தாக்குதலுக்கு ஏற்பாடுகள் நடக்க துவங்கி விட்டனர் என்று முடித்துள்ளனர்.

இதைப் படித்துவிட்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்தியா முழுவதும் இன்று கலாச்சார சீர்கேடு மேற்கத்திய நாடுகளால் நடக்கிறதா அல்லது சீன கலாச்சாரத்தால் சீர்கேடு நடந்துள்ளதா? எது உண்மை என்று எல்லோருக்கும் தெரியும்.

மேலும் இதுவரை இஸ்ரேலை போன்றோ அமெரிக்காவைப் போன்றோ எந்த ஒரு நாட்டின் மீதும் தன்னிச்சையாக சீனா ராணுவ தாக்குதல் நடத்தியது இல்லை. அவ்வாறு நட்பு நாடுகள் மீது நடக்கும் தாக்குதலுக்கு உதவி மட்டும் தான் புரிந்து கொண்டுள்ளது.

ஆகையால் இவர்கள் யாருக்காக உண்மையை பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கி கொண்டுள்ளனர் என்பதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்

இந்தியாவின் வளத்தையும் அறிவையும் அறிவியலையும் பண்டைய நாகரிகத்தின் நாகரிகத்தையும் திருடியது மட்டுமின்றி சீரழித்தது மேற்கத்திய நாகரிகமே. சீனா இதையெல்லாம் இந்தியாவுக்கு செய்ததாக ஒரு வரலாற்றுப் பதிவும் எந்த நூற்றாண்டிலும் பதியப்படவில்லை என்பது தான் உண்மை.

குறிப்பு : whatsapp நண்பர்கள் குழுவில் கலந்துரையாடலின் போது நான் பதிவிட்டது 

மேலும் இதன் தொடர்பு பதிவுகள் படிக்க கீழ் உள்ள இணைப்புகளின் பதிவுகளை படிக்கவும் 


Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Nagargal - A community's History Purposely Rewritten? Massacre Continues.