குத்தகை மற்றும் வாடகை பற்றி புரிந்து கொள்ள வேண்டியவை!

1. விவசாயத்திற்கு அல்லாத எந்தவித குத்தகையும் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

2. குத்தகை பத்திரத்தின் கண்டிசனுக்கு ஏற்றவாறு முன் அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து குத்தகையை முடிவுக்கு கொண்டு வரலாம். வருடாந்திர குத்தகை என்றால் ஆறுமாத நோட்டீஸ் கொடுத்தும், மாதந்திர குத்தகை என்றால் 15 நாட்கள் முன்பு நோட்டீஸ் கொடுத்தும் கொண்டு வரலாம்.

3. 1955 ன் ஆண்டின் உழுகின்ற குத்தகைகாரர் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டு, நில சொந்தக்காரரின் உரிமையையும் , குத்தகைகாரரின் கடமையையும் விவரித்து இருவரையும் கட்டுக்குள் வைக்கிறது.

4. வீட்டு வாடகையை பொறுத்தவரை 1948 இல் போட்ட வீட்டுவாடகை கட்டுபாட்டு சட்டமும், மீண்டும் அதனை திருத்தி போடப்பட்ட 1960 ஆண்டு சட்டமும் வீட்டு வாடகை நடைமுறைகளை கட்டுபடுத்துகிறது.

5. குத்தகை பாக்கி வைத்தல், நிலத்திற்கும், அதில் விளையும் பயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்துதல், சாகுபடி செய்யாமல் தரிசாக நிலத்தை போட்டிருத்தல் , விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் வேறு காரணத்திற்காக உபயோகபடுத்துதல் போன்ற காரணங்களுக்காக குத்தகைதாரரை குத்தகையில் இருந்து வெளியேற்ற முடியும்.

6. குத்தகையின் போது 1956 க்கு முன்பு நில சொந்தக்காரருக்கு 40% , குத்தகைகாரருக்கு 60% , கொடுக்க வேண்டும் என்று இருந்தது . பிறகு நில சொந்தக்காரருக்கு 25% குத்தகைதாரருக்கு 75% கொடுக்க சட்டம் இயற்றப்பட்டது.

7. குத்தகை தொகையை பணமாக கொடுக்கலாம், விளையும் பொருளாகவும் கொடுக்கலாம். குத்தகை தொகை விளையும் பொருளாக இருந்தால், அறுவடை செய்யப்பட்டு போரடிக்கும் களத்திலேயே பங்கு போட வேண்டும்.

8. 1969இல் உழவனுக்கே நிலம் சொந்தம் என்று உழவுதாரரின் குத்தகை உரிமை பதிவு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது யார்! யார்! கிராமத்தில் குத்தகைதாரர்கள், யார் யார் உரிமையாளர்கள் என்பதை விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பதை தாசில்தாரரிடம் கொடுத்திருப்பார்கள்.அதன் படி அவர்கள் எல்லாம் பட்டாதாரர் ஆகிவிட்டார்கள்.

9. வீட்டு வாடகையை பொறுத்தவரை வாடகை கொடுக்க வேண்டிய கெடுவின் அடுத்த மாத இறுதிவரை வாடகை பாக்கி , வீட்டு உரிமையாளர்கள் எழுத்து பூர்வமான உரிமை இல்லாமல் உள்வாடகை விடுதல், எந்த நோக்கத்திற்காக வாடகை விடப்படுகிறதோ அதில் இல்லாமல் வேறு காரியத்திற்காக பயன்படுத்துதல்.

10. சட்ட விரோதமான காரியங்கள், பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு இடையூறு செய்தல், மலை வாசல் தளங்களில் இல்லாத ஊர்களில் சேர்ந்தார் போல் நான்கு மாதங்கள் குடி இல்லாமல் இருப்பது. வீட்டு சொந்தக்காரரின் உரிமையை மறுப்பது. இது மட்டும் இல்லாமல் சொந்த உபயோகத்திற்கு வீட்டை காலி செய்ய சொல்லலாம்.

11. வீட்டு உரிமையாளருக்கு , அவர் குடும்பதாரருக்கு வீடு தேவையாய் இருந்தால் , வீட்டின் ஒரு பகுதியில் வீட்டு சொந்தகாரர் இருந்து மற்ற பகுதியில் குடியிருக்கும் வாடகைதாரரை தன் சொந்த உபயோகத்திற்கு காலி செய்ய சொல்லலாம்.

12. உரிமையாளரின் வியாபரத்திற்கு இந்த இடம் தேவைபட்டால் அதனை கட்டாயம் காலி செய்ய சொல்லலாம். காலி செய்யாமல் பழுது பார்க்க முடியாது என்றால் வாடகைதாரரை காலி செய்யலாம் . பழுது பார்த்த பிறகு அதே வாடகைதாரர் கட்டிடத்தை கேட்க வாடகைதாரருக்கு உரிமை உண்டு .

13. வீட்டை இடித்து மறு கட்டிடம் கட்ட போகிறோம் என்று சொல்லி வாடகைதாரரை காலி செய்யலாம், ஆனால் வீட்டை இடித்து கட்டவில்லை என்றால் மீண்டும் வாடகைக்கு போக வாடகைதாரருக்கு உரிமை உண்டு.

நன்றி.

குறிப்பு :- வலைத்தொகுப்பு

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?