இஸ்ரேல் - கற்றுத்தரும் பாடம்

இஸ்ரேல், இன்றைய தேதியில் உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கிற ஒரு நாடு பூமியின் அத்தனை ஊடகங்களிலும் நாள்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு. உலகத்தின் மூன்றாம் உலக போருக்கு காரணமாக அமையக் கூடியது என்று பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு நாடு, மனித குலத்தின் மிகவும் புத்திசாலிகள் என்று பெயர் பெற்றவர்கள் கொண்டிருக்கின்ற ஒரு நாடு. உலகத்தின் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கு அளித்த ஒரு இனம், யூதர்கள் மனிதகுலத்தின் மிக மோசமான அழிவின் ஆயுதங்களை உருவாக்கி தாமதாக கொண்டிருப்பவர்கள். இந்த கருத்தில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருந்துவிட முடியாது.

இந்த இஸ்ரேல் தேசம் பற்றியும் அந்த தேசத்தின் சொந்தக்காரர்கள் யூதர்கள் பற்றியும்தான் நாம் சற்று விரிவாக இந்த கட்டுரையில் ஆராய இருக்கின்றோம்.

இஸ்ரேல் தேசம் பற்றி நாம் அறிந்து இருக்கின்ற விஷயங்கள் என்ன என்று பார்க்கும்போது இஸ்ரேல் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நாடு பாலஸ்தீனர்களை மிக மோசமாக நடத்தி ஒடுக்குகின்ற ஒரு நாடு இப்படியான ஒரு பார்வைதான் யூதர்கள் மீது நமக்கு இருக்கின்றது. ஆனால் இஸ்ரேல் என்ற அந்த நாட்டுக்கு இன்னொரு பக்கமும் இருக்கின்றது முக்கியமான அந்த பக்கம்தான் மிகவும் அக்கறையுடன் அவசியமுடன் பார்க்கவேண்டிய ஒரு பக்கம் என்று நினைக்கின்றேன்.

உண்மையிலேயே சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக அடிமையாக இருந்த ஒரு நாடு தான் இஸ்ரேல் என்பதை பலர் அறிந்திராத அல்லது மறந்துவிட்டு இருக்கின்ற ஒரு விடயம்.

சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காலம் அந்நியர்களால் ஆளப்பட்ட இஸ்ரேல் தேசமும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த யூதர்களும், எப்படி விடுதலை பெற்றார்கள்? எப்படி தங்களுக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக் கொண்டார்கள்?

சுமார் 2500 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அடிமைகளாக வாழ்ந்து உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டு மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு ,நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, பலம்பொருந்திய நாடுகளால் அழிக்கப்பட்ட யூதர்கள் எப்படி தங்களை தற்காத்துக்கொண்டு, தங்கள் இனம் முழுதும் கட்டி அணைத்துக் கொண்டு தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்கின்ற சரித்திர உண்மையை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உண்மைகள்.

ஒரு தேசத்தின் அல்லது இனத்தின் விடுதலை என்பது சில வருட போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையே மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல.  ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்கள் உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம். 

யூதர்களுடைய அந்த விடுதலையின் பயணம் பல நூற்றாண்டுகளை கொண்டது. ஈழத்தமிழர்கள் போல் பல இன்னல்களுக்கு அப்பால்தான் அவர்களுக்கு இந்த விடிவு கிடைத்திருக்கின்றது 

இன்று உலகின் போக்கையும் உலக ஒழுங்கையும் மாற்றி விடக்கூடிய வல்லமையை, இஸ்ரேல் போன்ற ஒரு சிறிய நாடு பெற்றிருக்கிறது என்றால் அதன் பின்னணியில் பல நூற்றாண்டுகளாக இஸ்ரேலியர்களுக்கு இருந்த நம்பிக்கை,  கடின உழைப்பு, இழப்புகளை தாங்கிக் கொள்ளும் பலம் , எதிரிகளை கண்டு அஞ்சாத வீரம் , ஒற்றுமை , இதுபோன்று பல காரணங்களை கூறிக்கொண்டே போகலாம். 

இஸ்ரேல் என்கின்ற தேசம் எப்படி உருவானது? 

பாபிலோனியர்கள் எகிப்தியர்கள் ரோமானியர்கள்  கிரேக்கர்கள், இன்னும் பல நாடுகளாலும் அடிமைகளாக்கப்பட்டு, நாடற்றவர்களாக, அகதிகளாக, வாழ்ந்து வந்த யூதர்கள், எப்படி தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது? 

அகதிகளாக அவர்கள் சிதறி வாழ்ந்த தேசங்களில், அடிமைகளாக அவர்கள் பல நூறு வருடங்களாக வாழ்ந்து வந்த தேசங்களில் எப்படி அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது? 

தங்களுக்கென்று ஒரு நாடு அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் எப்படி யூதர்களால் நீண்டகாலம் வாழ முடிந்தது? 

இந்த விஷயங்கள்தான் மிகவும் பிரமிக்க தக்க விஷயங்களாக இருக்கிறது. நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாக நான் கருதுகிறேன். 

மேலும் இந்த விடயங்களை நாம் தெரிந்து கொண்டோமெனில், தமிழர்களாகிய நாம், ஈழத்தையும், ஈழத்தமிழர்களையும், நமது கலாச்சாரத்தையும், நமது வாழ்வாதாரத்தையும்  இழந்து இப்போது பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துகொண்டுள்ள நாம், எப்படி, தமிழையும், தமிழரையும், தமிழினத்தையும், இழந்த மரியாதையும் மீட்டு எடுக்கலாம் என்பதை அறிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

இந்தியாவிலும், இங்கிலாந்திலும், பிரான்சிலும், மலேசியாவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஈழத்தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அல்லது நாடு கடத்தப்பட்டால் உடனடியாகவே நாம் துவண்டு போய் விடுகிறோம் அல்லவா? இஸ்ரேல் மக்களுடைய சரித்திரத்தை ஆராயும் பொழுது இஸ்ரேலியர்களை துன்புறுத்தாத தேசங்கள் உலகில் இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்கு அவர்களுக்கு உலகின் பல நாடுகளிலும்  ஒதுக்கப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், ஓட ஓட விரட்டப்பட்டார்கள்.  உலகில் உள்ள நாடுகள் ஈழ  தமிழர்களை கைவிட்டு விட்டதாக நாம் நினைக்கின்றோம் இல்லையா? இஸ்ரேலுடைய நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?

  •  கிபி 1390 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்து வந்த யூதர்கள் கட்டாயமாக கிருத்துவ மதத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள், மதம் மாற மறுத்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள், அல்லது நாடு கடத்தப்பட்டார்கள்.
  • கிபி 1495 ஆம் ஆண்டு லிதுவேனியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள் 
  • கிபி 1495 ஆம் ஆண்டு இத்தாலியிருந்த யூதர்கள் கிருத்துவ மதத்திற்கு கட்டாய மதம் மாற்றப்பட்டார்கள் மற்ற யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள் 
  • கிபி 1502 ஆம் ஆண்டு லிதுவேனியாவில் வசித்த யூதர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்கள், அல்லது அடிமைகளாக மற்ற நாடுகளுக்கு விற்கப்பட்டார்கள் 
  • கிபி 1541 ஆம் ஆண்டு நேபிள்ஸ் இருந்த யூதர்கள் வெளியேற்ற பட்டார்கள் 
  • கிபி 1648 முதல் 1656 ஆம் ஆண்டு வரை போலந்தில் வாழ்ந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் 
  • கிபி 1717 முதல் 1747 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள் 
  • கிபி 1941 முதல் 1945 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, போலந்து, ருமேனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த சுமார் 60 லட்சம் யூதர்கள் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதுபோன்ற கொடுமைகள், இனப்படுகொலைகள், அழிவுகள், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை ஆகியவற்றை அனுபவித்த இஸ்ரேலியர்கள், எப்படி அவர்களால் பின்காலத்தில் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கி கொள்ள முடிந்தது? 

சுமார் 1900 ஆண்டுகள் அடிமைகளாய், அகதிகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரேலியார்கள், விடுதலையின் பால் அழைத்து சென்ற விடயம் எதுவாக இருக்கும் என்று யோசிக்கும்போது. நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் தான் குறிப்பிட முடியும். உலகம் முழுவதும் அடிமைகளாய், அகதிகளாய் வாழ்ந்த இஸ்ரேலியர்கள், தங்களது விடிவு காலம் ஒரு நாள் நிச்சயம் வரும், தமக்கான விடுதலை நிச்சயம் வரும், தாம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவோம் என்கின்ற நம்பிக்கையும்,  அசைக்க முடியாத வைராக்கியமும் அவர்களிடம் அதிகமாக இருந்தது என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த நம்பிக்கையையும் வைராக்கியம் அவர்கள் சில வருடங்களோ சில மாதங்களோ மட்டும் சுமக்கவில்லை பல நூற்றாண்டுகளாக இதே இலட்சியத்துடன் கனவுடன் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அகதிகளாக வாழ்ந்த போதிலும், ஓட ஓட விரட்டப்பட்ட போதிலும் அவர்கள் எதனை விட்டுவிட்டு ஓடினாலும் நம்பிக்கையை மட்டும் விடாமல் வைராக்கியத்துடன் இருந்தனர். 

ஒரு இடத்திலோ அல்லது நிகழ்வில் இரு யூதர்கள் சந்தித்துக்கொண்டால் அவர்கள் விடைபெறும்போது நாம் மீண்டும் ஜெருசலத்தில் சந்தித்துக் கொள்வோம் என்று நம்பிக்கையோடு கூறுவார்கள். தங்களின் விடுதலை என்பதும் தங்களுக்கான தேசம் என்பதும் இஸ்ரேலியர்களின் கனவாக உயிராக மூச்சாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. பல இன்னல்கள், பல இடப்பெயர்வுகள் , இன அழிப்புகள் என்பவற்றைக் கடந்து அவர்களால் தங்கள் தேசத்தை, இலட்சியத்தை அடைய முடிந்ததற்கு இதுதான் முக்கியமான காரணம்.

இன்று ஈழத் தமிழர்கள், தங்களுக்கான தேசத்தை இழந்து அகதிகளாக பல நாடுகளில் வாழ்ந்து கொண்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் நிலையும் இஸ்ரேலியர்களின் நிலையும் ஏறக்குறைய ஒரே நிலையில் தான் உள்ளன. 

இஸ்ரேலியர்களுக்கு இருந்த அந்த நம்பிக்கையும் அந்த வைராக்கியமும் அந்த விடுதலை வேள்வியும் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும், தமிழனுக்கும் இருக்குமாயின் நமக்கான தேசமும் நமக்கான சுதந்திரமும் ஒரு நாள் நிச்சயம் அடைய முடியும். இஸ்ரேலியர்களை போன்று பல இன்னல்களை இன்றைய ஈழத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் நாம் ஒருவரோடு ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதும் பேசிக் கொள்ளும் போதும், நமது விடுதலை பற்றியும், இனத்தின் விடுதலை பற்றியும், நமக்கான தேசத்தை பற்றியும் நிச்சயம் பேசிக்கொள்ள வேண்டும், இதை ஒரு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். 

சரி. அடுத்ததாக ஒரு முக்கிய விடயத்திற்கு வருவோம். புலம்பெயர் மண்ணில் வாழ்ந்த இஸ்ரேலியர்கள் தங்களுக்கான தேசத்தை அமைக்கும் அடித்தளத்தை எவ்வாறு உருவாக்கினார்கள்? தனிப்பட்ட முறையிலும், அமைப்புகளாகவும் எப்படி செயல்பட்டார்கள்? புலம்பெயர்ந்த வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் தமது விடுதலைப் பயணத்தை எப்படி மேற்கொண்டார்கள்? இந்த விடயங்களில் இருந்து நாம் எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா? இந்த விடயங்கள் பற்றித்தான் தொடர்ந்து நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

தங்களுக்கான தேசமும் தங்களுக்கான விடுதலையும் தங்கள் இனத்திற்கான விடுதலையும் வேண்டும் என்ற நோக்கத்தை வெறும் கனவு மட்டும் காணாமல் நல்ல யூகங்களையும் அதற்கான வழிமுறைகளையும் ஆரம்பத்திலிருந்தே வைத்துக்கொண்டிருந்தனர்

தங்களால் இயன்ற அளவிற்கு முயற்சி செய்தார்கள் தங்களால் முடியவில்லையா தங்களது அடுத்த தலைமுறையினருக்கு அந்த விடுதலை வேட்கையை விட்டு சென்றார்கள். தங்களது விடுதலையின் பயணத்தை அடுத்த தலைமுறையினரும் பின்பற்றும்படி பார்த்துக்கொண்டார்கள் ஓராண்டு காலம் ஈராண்டு காலம் அல்ல தொடர்ந்து 1008 ஆண்டுகளுக்குமேல் இந்த கனவை அவர்கள் சுமந்து கொண்டு வந்தனர்

இஸ்ரேலியர்கள் தங்களது விடுதலைக்காக இரண்டாயிரம் ஆண்டுகள் அந்த கனவை சுமந்து கொண்டு இருந்தார்கள் என்பது உண்மை இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த கனவை இஸ்ரேலியர்கள் எப்படி தலைமுறை தலைமுறையாக நகர்த்தி கொண்டு வந்தார்கள்? என்ற உண்மையை நாம் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும் தெரிந்துகொள்ளவேண்டும்.

 இஸ்ரேலியர்கள் தங்கள் கனவை எவ்வாறு தலைமுறை தலைமுறையாக கொண்டுசென்றனர் என்பதையும் அந்த விடுதலை பெறுவதற்காக என்னென்ன வழிவகைகளை வகுத்தனர் என்பதையும் என்னென்ன யூகங்கள் அமைத்தார்கள் என்பதனையும் நாம் நிச்சயம் தெரிந்து வைத்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இஸ்ரேலியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக புலம்பெயர்ந்து மற்ற நாடுகளில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாம் கண்டோம் அவ்வாறு புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 நமது பாட்டனுக்கு பாட்டனார் ராஜராஜ சோழன் போன்றவர்கள் இந்த உலகத்தை ஆண்டு வந்தார்கள், நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நாம்தான், உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் நம் தமிழ் மொழிதான் தாய் மொழி என்று பழைய வரலாற்றினையும் அதன் சிறப்பினையும் நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேலையில், நாம் இப்போது எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையையும் உணரத்தான் வேண்டும். உலகத்தை ஆண்ட சமுதாயமாக இருந்த தமிழர்கள் இன்று நமது நாட்டிலேயே நாம் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை. தமிழனையும் தமிழ்நாட்டையும் ஆள்வதற்கு ஒரு தமிழன் கூட தகுதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் உள்ள தொப்புள்கொடி உறவையும் அறுத்தெறிந்து கொண்டு பல தமிழர்கள் வாழ்ந்துகொண்டு உள்ளதுதான் உண்மை நிலவரம். ஈழத்தில் நடப்பது வேறு ஒரு நாட்டில் வேறு ஒரு இனத்திற்கு நடக்கும் நிகழ்வாகவே நாம் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

தமிழுக்கான அந்தஸ்தையும் தமிழன் தமிழனாக தலைநிமிர்ந்து மறுபடியும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான முயற்சியும் நாம் செய்து கொண்டிருக்கிறோமா? தமிழ் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்தும் தமிழை வைத்துக்கொண்டு தன்னை தமிழினத்தின் தலைவனாக காட்டிக் கொள்ளும் இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களை நாம் நம்பலாமா? அவர்கள் எந்த வகையிலான யுகங்களை வகுக்கிறார்கள் ? இதையெல்லாம் பற்றித்தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். 

இஸ்ரேலை பற்றி ஏன் நான் ஆராய வேண்டுமென்று முற்பட்டேன் என்று கேட்டால் இஸ்ரேலுக்கும் தமிழர்களாகிய நமக்கும் ஈழத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன இன்று எப்படி உலகம் முழுக்க தமிழர்களும் ஈழத் தமிழர்களும் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோமோ அதைப்போலத்தான் இஸ்ரேலியர்களும் ஒரு காலத்தில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டு வந்தனர் நாமாவது கொத்தடிமைகளாக இல்லாமல் பலநாடுகளில் நல்ல நிலைகளில் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆனால் இஸ்ரேலியர்கள் அடிமைகளாக வாழ்ந்து வந்துள்ளனர் பல விடயங்களில் இஸ்ரேலியர்களை விட தமிழர்களாகிய நாம் நல்ல நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. 

அடிமைத்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரேலியர்கள் ஒன்று கூடி இரண்டாயிரம் ஆண்டுகளாக கனவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சென்று அவர்களுக்கான அவர்கள் தேசத்தை அமைத்தார்கள் என்பது மட்டுமில்லாமல் அந்த தேசத்தை வைத்துக்கொண்டு இப்போது உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. 

பல்வேறு வகைகளில் நாம் அவர்களைவிட நல்ல நிலையில்தான் வாழ்ந்துகொண்டுள்ளோம் , ஆகையால் நமக்கான விடுதலையையும் தமிழர்களையும் தமிழ் இனத்திற்கான விடுதலையையும் தமிழ்நாட்டிற்கான விடுதலையையும் ஒரு தமிழன் ஒரு தமிழனை ஆளும் திறமையும் ஏன் சாத்தியப்படாது? அடிமைத்தனமாக வாழ்ந்த இஸ்ரேலியர்கள் வகுத்த வியூகங்கள் என்ன நாம் அமைத்துக் கொண்டுள்ள வியூகங்கள் என்ன அவர்கள் எதை செய்தனர் நாம் எதை செய்கின்றோம் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்களுடைய அனுபவம் நமக்கு நமக்கும் உதவும் என்ற ஆவலில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.

இஸ்ரேலியர்கள் யார்?
இஸ்ரேலியர்கள் என்றால் யார்? அந்த இனத்திற்கு ஏன் இந்த பெயர் வந்தது? ஏன் இவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்? அவர்களின் வரலாறு என்ன? இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்? இஸ்ரேலியர்கள் எவ்வாறு தமது தேசத்தை மீட்டெடுத்துக் கொண்டார்கள்? ரத்தத்தால் எழுதப்பட்ட இந்த வரலாற்றை நாம் இப்போது பார்ப்போம்


புலம் பெயர் வாழும் தமிழர்களும் இஸ்ரேலியர்களும் 
தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு பல நாடுகளில் அகதிகளாக புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் கஷ்டப்பட்டு தங்களை வளர்த்துக் கொண்டார்கள். அவ்வாறு தங்களை வளர்த்துக் கொண்ட இஸ்ரேலிய மக்கள் தங்களது திறமைகள், செல்வங்கள் அனைத்தையும் தமது நாட்டின் விடுதலைக்காக பயன்படுத்தினார்கள் என்றால் மிகையாகாது. புலம் பெயர்ந்து வாழ்ந்த வந்த சில இஸ்ரேலியர்கள் அந்த அந்த நாடுகளில் நன்றாக வாழ்ந்து வந்தனர், ஒரு சிலர் தங்களது அயராத உழைப்பினால்  தங்களை நல்ல நிலைக்கு வளர்த்துக் கொண்டார்கள். தாங்கள் வாழ்ந்த நாடுகளுக்கும் பல வகைகளில் உதவி செய்தார்கள் அப்படி உதவிகள் செய்ததினால் அடைந்த பலாபலன்களை தங்கள் விடுதலைக்காக பயன்படுத்தினார்கள்.

உதாரணமாக 1914 ஆம் ஆண்டு முதலாம் உலக யுத்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த முதலாம் யுத்தத்தில் சுமார் பல 100 நாடுகள் கலந்து கொண்டாலும் பிரதான நாடுகளாக, முக்கியமாக பிரிட்டானியாவிற்கும், ஜெர்மனிக்கும் தான் நடைபெற்றது. சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தில் பிரிட்டானியா ஒரு பெரிய சங்கடத்தை சந்திக்க நேர்ந்தது. பிரிட்டானியா சந்தித்த அந்த சங்கடமும் யூதன் செய்த உதவியும் தான் யூதர்கள் தேசத்தை அமைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருந்தது. யுத்தத்தின்  ஆரம்ப கட்டத்தில் வெற்றிகரமாக முன்னேறிய ஜெர்மனிய படையினர் ஐரோப்பாவின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தார்கள், குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜெர்மனியப் படைகள் கைப்பற்றி வெற்றி கண்டன. இது பிரிட்டானியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. எப்படி என்றால் அந்தக் காலத்தில் பீரங்கி இயக்குவதற்குத் தேவையான அசிடோன் (acetone) என்ற வெடிமருந்து மருந்து மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒரு வகை மரங்களில் இருந்து தான் பிரிட்டானியா பெற்று வந்தது. ஜெர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்ததனால் அசிட்டோன் வெடி மருந்தை தயாரிக்க முடியாமல் பிரிட்டானியா திண்டாடியது. ஒரு சந்தர்ப்பத்தில் பிரிட்டானியா தனது பீரங்கிகளை இயக்குவது பல சிக்கல்கள் ஏற்பட்டன. பீரங்கித் தாக்குதல்களை தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரிட்டானியப் படைகள் தள்ளப்பட்டனர். முதலாம் உலக யுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்த அதிசயத்தை செய்தது ஒரு யூதர். முதலாம் உலக யுத்தத்தில் பிரிட்டானியா வெற்றி பெறுவதற்கு அந்த யூதரின் ஒரு செயலே காரணமாக இருந்தது. யார் அந்த யூதர்? அப்படி அவர் என்னதான் செய்திருந்தார்? 

முதலாம் உலக மகா யுத்தத்தில் பிரிட்டானியா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த யூதரின் பெயர் டாக்டர் Chaim Weizmann. 1874 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்த இவர், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து பல்கலைக் கழகப் படிப்பை முடித்துக்கொண்டு, இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரசாயன பேராசிரியராக பணியாற்றி இருந்தார். பிரிட்டானியா படைகளின் உயர் அதிகாரிகளோடு நல்ல தொடர்பு இருந்தது. முதலாம் உலக யுத்தத்தின் போது பிரிட்டானியா படைகளுக்கு வெடி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவரை அணுகிய பிரிட்டானியா உயர் அதிகாரிகள், பீரங்கிக்கான வெடி மருந்துகளை தயாரிக்க முடியுமா என்று கேட்டார்கள். முடியும் என்று பதிலளித்த Weizmann தனக்கு ஒரு இரசாயன ஆய்வுகூடமும், தொழில்நுட்ப வசதிகளும், மூட்டை மூட்டையாக சோளம் விதைகளையும் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். சோளம் விதைகளை மூலப்பொருட்களாக கொண்டு அசிடோன் என்கின்ற வெடி மருந்தை தயாரித்து பிரிட்டானியா படைகளுக்கு கொடுத்தார் Weizmann. அவர் தயாரித்துக் கொடுத்த வெடிமருந்துகளை பயன்படுத்தி பிரிட்டானியப் படைகள் முதலாம் உலகப் போரில் வெற்றி கொண்டன. முதலாம் உலக யுத்தம் முடிவடைந்த உடனேயே பிரிட்டானியா அரசாங்கம் Weizmannனை அழைத்து தமக்கு அவர் செய்த பேருதவிக்காக பிரதி உபகாரம் செய்ய முன்வந்தது. ஆனால் Weizmannனோ தனக்கு எதுவும் தேவையில்லை ஆனால் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, நீண்ட காலமாக தாயகம் இன்றி தவிக்கும் யூதர்களுக்கு பூர்வீகத் தாயகமான, தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் பாலஸ்தீன நாட்டை, யூதர்களின் நிரந்தர குடியிருப்பாக வழங்க வேண்டுமென்றும் அதுவே தான் விரும்பும் வெகுமதி என்றும் தெரிவித்தார். 1517 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரை சுமார் 400 வருடங்கள் துருக்கியின் ஓட்டோமான் பேரரசின் ( Ottoman Empire) வசமிருந்த ஜெருசலம் பகுதி, முதலாம் உலக யுத்தத்தில்  பிரிட்டானியா படைகளால் கைப்பற்றப் பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
Weizmann விருப்பத்தை கையிலெடுத்த வெளியுறவுத்துறை அதிகாரி உங்கள் ஜெருசலம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும், பிரிட்டானியாவிற்கு  நன்மைகள் செய்தஉங்களுக்கு, நிச்சயம் உதவி செய்யும் என்று கூறினார். இவர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த பிரிட்டானியா 1915 வருடம் நவம்பர் 2-ம் தேதி, பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாயகம் அமைக்கப்படும் என்ற பிரகடனத்தை (Balfour Declaration) வெளியிட்டது. (ஆதாரம் :- https://en.wikipedia.org/wiki/Chaim_Weizmann)

இப்படி பல இஸ்ரேலிய மக்களின் அகதி வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது தான் இடம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்கள் அனைவருமே தங்கள் தேசத்தின் நலனுக்காக ஏதோ ஒருவகையில் பங்களிப்பு செய்ததை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழர்கள்/ஈழத்தமிழர்களை போல அல்லாமல், அந்த இனக் குழுமத்தில் இருந்து அந்நியப்பட்டு வாழ்ந்து வந்த யூத முக்கியஸ்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றுதான் கூறவேண்டும்.

இன்று எத்தனையோ தமிழர்கள்/ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அதிக பேர் உயர்ந்த ஸ்தானங்களில் இருக்கின்றனர். அரசியலில், தீர்மானம் எடுக்கும் இடங்களில்கூட அமர்ந்திருக்கின்றனர், ஆனால் தமது திறமையின் பலன்கள், அவர்கள் சார்ந்த மக்களின் விடுதலைக்கு வித்தாக வேண்டுமென்று அவர்கள் சிந்திப்பதில்லை. விடுதலைபெற்ற இஸ்ரேலியர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய பாடம் இது என்று கருதுகிறேன். 

இஸ்ரேலியர்களின் விடுதலை என்று நாம் ஆராயும் பொழுது அந்த விடுதலைக்கான வித்துக்களை, புலம்பெயர் நாடுகளில் நல்ல அந்தஸ்தில் இருந்த கல்விமான்கள் தான் பெற்றிருந்தார்கள் என்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கிறது. அகதிகளாக இருந்த யூதர்களை ஒரு விடுதலையின் பாதையில் பயணிக்க கூடியவர்களாகவும், அந்த விடுதலையின் பாதையில் வழிநடத்தி சென்றவர்களும் யார் என்று பார்க்கும் பொழுது அவர்கள் கல்விமான்களாகவும் புலம்பெயர் நாடுகளில் உயர் பதவிகளை வகித்தவர்கள் ஆகவே இருக்கின்றனர். 

புலம்பெயர்ந்த தமிழர்கள்/ஈழத்தமிழர்களை ஒப்பிடும்போது, புலம்பெயர் நாடுகளிலுள்ள கல்விமான்கள் உயர் பதவி வகித்தவர்கள் பெரும்பான்மையினர் தமது இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கும் முன் வரும் சம்பவங்கள் மிக மிக குறைவு என்றுதான் கூறவேண்டும். தங்களது திறமைகளை தங்களது அறிவையும் தமக்காகவும் தமது குடும்பத்தினருக்காகவும் மாத்திரமே பயன்படுத்துகின்றனர். 

இந்தப் போக்கே பெரும்பான்மையான தமிழர்கள்/ஈழத்தமிழர்களின் மனப்போக்கு ஆக காணப்படுகின்றது அப்படி விதிவிலக்காக போராட்டத்தின் பாதையில் தம்மை உள் நுழைக்க முனையும் அறிஞர்களையும் ஓரங்கட்டி துரோகிகள் ஆக்கி, ஒதுக்கி வைக்கும் பழக்கத்தையும் நாம் நமதாக கொண்டிருக்கிறோம், என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன். ஆகமொத்தத்தில் அறிஞர்கள் துறைசார் வல்லுனர்கள் தமிழர்கள்/ ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை தலைமை தாங்க முன்வருவதில்லை. அவர்கள் முன்வர வேண்டும். அப்படி முன் வருபவர்களை தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டு உள்வாங்குவது மிக மிக அவசியமான ஒன்று. 

தொடரும்... 

இதை பற்றிய தொடர்பு பதிவுகளின் தொகுப்புகளை கீழே உள்ள இணைப்பில்  படிக்கவும் 













Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?