சார்பதிவு குறித்த தொகுப்பு
சார்பதிவு அலுவலகத்தில் சொத்தம் 5 புத்தகங்கள் இருக்கிறது.
அதற்கு முறையே
1.புத்தகத்தில் கிரயம் அடமானம், குத்தகை, விடுதலை, நன்கொடை முதலியவற்றினை பதியும் பத்திரங்களின் விவரங்கள்.
2.வது பத்திரத்தில் பத்திரம் பதியமுடியாது என ஒதுக்கப்பட்ட காரணங்களை எழுதி வைக்கும் புத்தகமாகும்.
3.உயில் தத்து எடுக்கும் எதிர்காலம் போன்ற பத்திரங்கள் பதியும் புத்தகம் ஆகும்.
4.பல்துறை உயில்களை பதியும் புத்தகம் பொது அதிகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதில் தான் பதியப்பட்டது.
5. உயில்கள் முத்திறையிடப்பட்ட உறைகளில் வைப்பது
அனுபந்தம் 1 புத்தகம் 1 ல் எழுதிகொடுத்தவர் பெயர் எழுதி வாங்கியவர் பெயர் விவரம் முழுதும் இதில் இருக்கும்
அனுபந்தம் 2 பதிவு செய்யப்பட்ட சொத்துவிவரம் இதில் இருக்கும்.
அனுபந்தம் 3 உயில் சாகனம் எழுதி வைத்தவர் பெயர் உயில் சாதனத்தின் பயனாளிபெயர் இருக்கும்.
அனுபந்தம் 4 புத்தகம் 4ல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் பெயர் முகவரி எல்லா விவரங்களும் இருக்கும்.
சொத்துக்கள் இந்த அனுபந்தகளை பார்வையிட விரும்பினால் மனு கொடுத்து கட்டணம் கட்டி பார்வை இடலாம்.
சார்பதிவாளர் எதனையெல்லாம் பதிவு செய்ய மறுக்கலாம். காரணங்கள்:
1.சட்ட விரோதமாகவும், ஒழுக்க கேடாகவும் உள்ள பத்திரங்களை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம்.
2.பதிவு கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் பதிவு செய்ய மறுக்கலாம்.
3.பத்திரம் எழுதிகொடுத்தவர் மனநிலை சரியில்லாதவராகவோ, மைனராகவோ இருந்தால் அந்த பத்திரத்தை மறுக்கலாம்.
4.பத்திரம் எழுதி கொடுத்தவர் சார்பதிவாளர் முன்பு நான் எழுதி கொடுக்கவில்லை என்று சொன்னால் சார்பதிவாளார் பத்திரம் பதிவு செய்ய மறுக்கலாம்.
5.சாட்சிகள் யாரும் இல்லை என்றால் பதிவினை மறுக்கலாம்.
6.பத்திரத்தில் சம்மந்தபடாத எவரையேனும் பத்திரத்தில் சேர்ந்தால் அதனை பதிவுசெய்ய மறுக்கலாம்.
7.உயில்களை தவிர ஏனைய பத்திரங்களை கையெழுத்திடபட நாளில் இருந்து நான்கு மாத காலத்திற்குள் பதிவாளரிடம் பதிவுக்கு சேர்க்கப்பட வேண்டும் அந்த காலகெடு முடிந்தால் சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம்.
8.சொத்துவிவரங்கள் தேதி போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடபடவில்லை என்றாலும் மறுக்கலாம். சார்பதிவாளருக்கு புரியாத மொழியிலும் குழப்பங்களுடனும் இருந்தாலும் மறுக்கலாம்.
ஒவ்வொரு பத்திரம் போடும்போதும் 1 பத்திரத்தை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து விடுபவரோ என்று பயந்து பயந்து பத்திரம் போட்டு இருப்போம் பத்திரம் நடந்தால் தான் கமிஷன் என்ற பசி எக்கதோடு சார்பதிவாளரை பார்த்து கொண்டு இருந்து இருக்கிறேன். அப்படி எதற்கல்லாம். சார்பதிவாளர் பத்திரம் பதிவு செய்வதை மறுக்கிறார்.என்பதனை பார்ப்போம்.
சார்பதிவாளர் பத்திரத்தை பதிய மறுக்கும் போது பதிய மறுக்கப்படுகிறது. என பதிவாளர் எழுதி தரவேண்டும். அந்த பதிவு பத்திரம் சிலர் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எவ்வித கட்டணமும் பெறாமல் மனுதாரருக்கு தாமதமின்றி மற்றவருக்கான காரணத்தை எழுதி தரவேண்டும்.
வலை தொகுப்பு
Comments
Post a Comment