ஜப்பான் மட்டும் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது
1944-ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நேச நாடுகளின் கூட்டுப்படைகளைச் சிதறவிட்டு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளின் கைகள் ஓங்கியிருந்த சமயம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு 15000 ஜப்பானியர்களும் இந்திய எல்லையில் போரை துவங்கினார். உலகப்போரில் பிரிட்டிஷ் இந்தியப் படைப்பிரிவில் இருக்கும் இந்திய வீரர்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தது பிரிட்டன் . ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த காந்தி, தனது பாசிச எதிர்ப்புக் கொள்கையால் சம்மதம் தெரிவித்தார். ஆனால், நேதாஜி உள்ளிட்ட வேறு சில தலைவர்களும் இதனை கடுமையாக எதிர்த்தனர். இதனால் நேதாஜி சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய நேதாஜி பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து, அவற்றின் உதவியோடு பிரிட்டிஷ் அரசை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டார். ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் அங்கிருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றவர், ஜெர்மனியின் கூட்டாளியான ஜப்பானுடன் கைக்கோர்த்த...