“ஆடு வங்கி”

 முழுக்க முழுக்க ஆடு வளர்ப்புக்கு உதவவே ஒரு வங்கி 

இந்தியாவின் மகாராஷ்டிராவில்தான் இந்த “ஆடு வங்கி” செயல்படுகின்றது.

இந்த வங்கியில் ஆடு வளர்க்க ஆட்டைக் கடன் தருவார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த பணம் தர வேண்டியதில்லை. பதிலாக கடன் வாங்கியது ஓர் ஆடு என்றால் , நான்கு ஆடுகளை 40 மாதங்களுக்குள் ஒப்படைத்தால் போதுமானது.


இந்த வங்கியை மாநிலம் அல்லது மத்திய அரசு நடத்தவில்லை. தனியார் நடத்தும் வங்கி இது...

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, பாரம்பரிய விவசாயத்துடன் ஒருங்கிணைந்த விவசாயத்தின் கிளையாக ஆடு வளர்ப்பினை ஊக்குவிக்கவே நரேஷ் என்பவர், இந்த ஆடு வங்கியை, 2018முதல் நடத்தி வருகிறார்.

பணமாக 50இலட்சம் முதலிட்டு, 340 ஆடுகளுடன் இவர் வங்கியை ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


வித்தியாசமான வங்கி வித்தியாசமான சேவை.. ஆட்டை வளர்த்து, மனிதனையும் வளர்த்து, அவன் சமுதாயத்தையும் வளர்க்கும் வித்தியாசமான வங்கி 




Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Nagargal - A community's History Purposely Rewritten? Massacre Continues.