'அரோகரா'
தமிழ்க் கடவுள் முருகனை வணங்கும் போது 'அரோகரா' என்று பக்திப் பெருக விண்ணப்பிக்கிறோம்.
அரோகரன் என்பது முருகனின் தூய, மிகத்தூயத் தமிழ்ப்பெயராகும் பெயராகும்.
- அரன் +ஓகரன் = அரோகரன்
(விதி = நிலைச்சொல்லின் ‘ன்’விலகி இயல்பாய்ச் சேரும்)
எ.கா :
சிவன் + பெருமான் = சிவபெருமான்
முருகன் + கடவுள் = முருககடவுள்
அதுபோல …..
அரன் +ஓகரன் = அ(ர+ஓ)கரன் = அரோகரன்
- அரோகரன் சரி., அது என்ன அரோகரா ?
அரோகரா என்பது முருகனை பெயர் சொல்லி அழைக்கும் விளிச்சொல் / விளிப்பெயர் ஆகும்
(விதி = பெயரில் ’’ன்’’ இருந்தால் அது விலகி ‘’ஆ’’ சேரும் )
எ.கா :
முருகன் = ’’முருகா’’
கந்தன் = ’’கந்தா’’
(முருகன், கந்தன் என்பது பெயர் ஆகும் . ஆனால் அழைக்கும் போது முருகா, கந்தா என்றுதான் அழைப்பார்)
அதுபோலவே
அரோகரன் = ’’அரோகரா’’
- எல்லாம் சரி, அரோகரன் என்றால் பொருள் என்ன ?
அரன் = சிவன், அரசன், மாவீரன், நெருப்பு, மஞ்சள்
ஓகரம் = மயில் .
ஓகரன் = மயிலன், மயிலை ஆள்பவன்,மயில் வாகனன்
அரோகரன் என்றால்
= சிவனின்(மகன்) மயில் வாகனன்
= சிவமைந்தன், மயில்வாகனன் என்று பொருள் .
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் , சொல்லில் உள்ள ஒவ்வ்வொரு எழுத்துக்கும் பின் ஒரு விதியோ , காரணமோ, குறிப்போ மறைதிருக்கும் .
- விதியில்லாமல் தமிழில்லை .
- விதிக்குள் இல்லை என்றால் அது தமிழே இல்லை .
பின் இணைப்பு : சிலரது ஐயங்களைப் போக்க சில விளக்கங்கள் :
- 1.அரன் +ஓகரன் = அரோகரன் -
இதில் அரொகரன் தானே வரவேண்டும் எப்படி அரோகரன் என்பதற்கான ஒரு விளக்கம் .
அரோகரா’’ என்ற விளிச்சொல்லே இங்கு அடிப்படை . அச்சொல்லில் இருந்தே நாம் பின்சென்று அதன் ஆடிப்படையைக் காண முயன்றவகையில் அடைந்த பெயர்ச்சொல்தான் அரோகரன் . ஆனால் இச்சொல் வழக்கில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும் .
- 2.அரன் +ஓகரன் = அரோகரன் -
அரொகரா என்னும் சொல் உயர்குரலெடுத்து விளிக்கும்போது , அழைக்கும்போது அளபெடை எடுத்து அரோகரா ஆக வாய்ப்புண்டு
எ.கா : தெருவில் விற்பனை செய்வோரின் குரல்
தயிரு, தயிரோய்., மீனு, மீனோய்….. என்று அளபெடுத்து நீள்வது போல
- 3. அரன் +ஓகரன் = அரோகரன் -
ரொ→>ரோ வாக நீட்சியடைய வீரசோழியத்தில் இலக்கணக் குறிப்புகள் உள்ளன . வடமொழி சார்ந்த சொற்கள் இணையும் போது , அவை தமிழ் இலக்கண முறைப்படி இணையாமல் ( தமிழ் இலக்கணம் = உயிர்முன் உயிர் வந்தால் உடன்படுமெய் ய்/வ் மிகும் ) , வடமொழி இலக்கண முறையிலேயே இணையும்(வட இலக்கணம் = உயிர்முன் உயிர் வந்தால் . வருமொழியின் உயிர்க்குறில் நெடிலாகி இணையும் (பெரும்பாலும் ஏ அல்லது ஓ ஆகும் ).
அந்த வடமொழி இலக்கணமும் இங்கு ஊடுருவி ரொ→>ரோ —ஆக மாறி இருக்க வாய்ப்புண்டு .
— அவ்வளவே !
Comments
Post a Comment