ஜப்பான் மட்டும் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது

 1944-ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நேச நாடுகளின் கூட்டுப்படைகளைச் சிதறவிட்டு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளின் கைகள் ஓங்கியிருந்த சமயம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு 15000 ஜப்பானியர்களும் இந்திய எல்லையில் போரை துவங்கினார்.


உலகப்போரில் பிரிட்டிஷ் இந்தியப் படைப்பிரிவில் இருக்கும் இந்திய வீரர்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தது பிரிட்டன் . ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த காந்தி, தனது பாசிச எதிர்ப்புக் கொள்கையால் சம்மதம் தெரிவித்தார். ஆனால், நேதாஜி உள்ளிட்ட வேறு சில தலைவர்களும் இதனை கடுமையாக எதிர்த்தனர். இதனால் நேதாஜி சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய நேதாஜி பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து, அவற்றின் உதவியோடு பிரிட்டிஷ் அரசை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டார். ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து ஆதரவு கோரினார்.

பின்னர் அங்கிருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றவர், ஜெர்மனியின் கூட்டாளியான ஜப்பானுடன் கைக்கோர்த்தார். ஜப்பானின் தார்மீக ஆதரவு கிடைத்ததும் நேதாஜிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. இந்தியர் ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, கலைந்துபோன இந்திய தேசிய ராணுவத்தை, மீட்டுருவாக்கம் செய்தார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளில் இருந்த இந்தியத் தொழிலாளர்களை, குறிப்பாக தமிழர்களை ஒன்றிணைத்து ஐ.என்.ஏ. படையில் சேர்த்தார். தமிழகத்தில் இருந்து ஏராளமான வீரர்களை திரட்டி முத்துராமலிங்க தேவர் அனுப்பினார். ஜப்பான் பிரதமர் ஹிடஹி டோஜா சிங்கப்பூரை நேதாஜியிடம் அளித்தார். அதை தொடர்ந்து மலேசியா , மியான்மர் அனைத்தும் INA களமாகின.


1943 அக்டோபர் 23ல் விடுதலை இந்தியாவின் தலைவராக நேதாஜி பதவியேற்றார் . முப்படைகளுக்கும் தளபதி ஆனார். அவருடன் பல அமைச்சர்கள் பதவியேற்றனர். அந்தமான் , நிகோபர் தீவுகளுக்கு கவர்னர் நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியான வெற்றியோடு இந்திய எல்லையில் அரகான் காடுகளை தாண்டி பிரிட்டிஷ் இந்திய படையின் மீது INA ,ஜப்பான் படை தாக்குதல் நடத்தியது. மணிப்பூரை கைப்பற்றியது INA . பின்னர் நாகலாந்தையும் கைப்பற்றியது. இதன் பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் எல்லையோர பாலங்களை தகர்த்தனர். இதனால் முன்னேற்றம் தடைப்பட்டது. சில காலம் காடுகளில் வீரர்கள் தங்க கடும் நோய்கள் பரவி பலவீனம் ஆகினர். தொடர்ச்சியாக 7 மாதம் போர் நடந்த போதிலும் பிரிட்டிஷ் தனது மொத்தப் படையையும் எல்லையில் குவிக்க INA விற்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டது. இத்தருணத்தில் பிரிட்டிஷ் படைகள் முன்னேறி நாசம் செய்தது. 6000 இந்திய வீரர்களோடு 7000 ஜப்பானிய வீரர்களும் கொல்லப்பட்டனர். தற்காலிகமாக வீரர்களை திரும்ப சொன்னார் நேதாஜி. அதன் பின் ஆயுதம் திரட்ட சென்ற நேதாஜி இறந்த செய்தி வந்தது. INA வீரர்கள் நாடு திரும்பினால் அவர்கள் மீது பிரிட்டிஷ் நடவடிக்கை எடுக்க சொன்னது. இது இந்தியாவில் கடும் வினைகள் ஏற்படுத்தியது. .


பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்தியர்கள் , நேதாஜியின் ராணுவத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் உயரதிகாரிகளை எதிர்த்து புரட்சி செய்தனர். போர்க்கப்பல்களை கடத்தினர். வெள்ளையர்களைக் கொன்றனர். இனி இவர்களை அடக்க முடியாது என பிரிட்டிஷ் முடிவுக்கு வந்தது . நேதாஜி இறப்பு ஒரு நாடகம் என்பதையும் பிரிட்டிஷ் அறிந்தது. மீண்டும் நேதாஜி வந்தால் பிரிட்டிஷ் இந்திய வீரர்களும் சேர்ந்துகொள்வார்கள் என உடனடியாக விடுதலையை அறிவிக்கப் போவதை சொல்லி இடைக்கால அரசின் நேருவை பிரதமாக்கியது. அதன் பின் விடுதலையை அறிவித்தது. இது தான் உண்மை வரலாறு. இதை மறைத்து அஹிம்சை முறையில் காந்தி விடுதலை பெற்று தந்தார் என போலி வரலாறு எழுதியுள்ளனர். இந்திய விடுதலைக்காக 7000 ஜப்பானியர்கள் உயிர் துறந்தனர். அவர்களுக்கு இந்தியா மதிப்பளிக்கும் வகையில் என்ன செய்தது? விடுதலைக்கு காரணமும் அவர்கள் தான்..






Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?