புராணக் கதைகளில் அசுரராக சித்தரிக்கப்பட்ட இராவணன், பத்மாசுரன், நரகாசுரன், மகிஷாசுரன் என அனைவரும் தமிழராக இருக்கிறார்கள்? ஏன் அப்படி?
புராணக் கதைகளைப் புரிந்து கொள்வதற்கு, அசுரர், சுரர் என்றார் இரு சொற்களின் வரலாறை அறிவது அவசியம். அசுரன்' என்ற சொல் உண்மையில் தமிழ்ச் சொல்லே அல்ல. வேதமொழியில் முதலிலும், பின்னாளில், சமஸ்கிருதம் இலக்கிய மொழியாக,உருவாக்கியபின் சமஸ்கிருதத்திலும் வழங்கப்படும் வட சொல். வடமொழியில் 'சுரர்' என்ற சொல்லுக்கு வானுகத்தில் வாழும் தேவர் என்று பொருள். ‘சுரேந்திரன்', ‘நரேந்திரன்' என்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இப்பெயர்களில் ஒளிந்திருக்கும் சுரர் - வானத்தில் இருக்கும் தேவர்கள்; நரர் - பூமியில் வசிக்கும் மனிதர்கள். இந்திரன் - வேந்தன் அல்லது தலைவன். இம்மூன்று சொற்களுமே வட சொற்கள்! சுரேந்திரன் = சுரர் + இந்திரன்; நரேந்திரன் = நரர் + இந்திரன்; சுரேந்திரன் - தேவர்களின் இந்திரன்; நரேந்திரன் - மனிதர்களின் இந்திரன்; (நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே - திருவருட்பா) ஆரியப் பிராமணர்கள் தங்களை “பூமியில் வாழும் தேவர்கள்” என்ற பொருள்பட, ‘பூசுரர்' என்று கூறுவர். பிராமணர் அல்லாத வேற்று மனிதர்கள் வெறும் ‘நரர்' மட்டுமே. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவ...