பாரத நாடு என்பது

 பரத மன்னரால் இந்த துணைக்கண்டத்திற்கு பாரத நாடு என்று பெயர் வரவில்லை பரதவர்கள் என்கிற பாண்டியர்களால் தான் பாரதம் என்கிற பெயரை இத்துணைக்கண்டம் பெற்றது.

பரதவர்கள் என்பவர்கள் நெய்தல் நில ஆதி குடிகள்,

இவர்களை கரையர் பௌரவர் கரவா என்றும் அழைப்பர்.

இந்த கரையர் குலத்தில் பிறந்து கொரியா சென்று முதல் கொரிய மன்னனை மணந்த அரசி தான் ஹீயோ ஹவாங்க் ஓக் என்கிற முதல் கொரிய தமிழ் அரசியான செம்பவளம்.

பரதவர்கள் என்கிற மீனவ சமூகத்தினர் தான் பாண்டியர்கள்.

உலகின் முதல் அரசை உருவாக்கி ஆட்சி செலுத்தியவர்கள் பாண்டியர்கள்.

"திண் திமில் பரதர்" - புற நானூறு. - வலிமையான களன்களை இயக்குபவர் பரதவர்கள்.

"புன் தலை இரும்பரதவர்" - பட்டிணப்பாலை - உப்புகாற்று செம்பட்டை முடியுடன் கூடிய இரும்பையொத்த வலிமை பொருந்தியவர்கள் பரதவர்கள்.

“தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” - புற நானூறு.

’தென் பரதர் போர் ஏறே” - மதுரை காஞ்சி.

"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்

கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",

(சூடாமணி நிகண்டு சூத்திரம்77)

“அரசர் முறையோ பரதர் முறையோ”

என பரதவர்கள் என்கிற பாண்டியர்கள் பற்றி எண்ணற்ற இடங்களில் தமிழ் சங்க இலக்கியப்பாடல்கள் மூலம் அறிய முடியும்.

இலங்கை பொலன்னறுவாவில் கண்டெடுக்கபட்ட பழங்கால கல்வெட்டில் "பரதஸஹகிதச" என்று எழுதப்பட்டிருந்தது அதன் அருகில் மரக்கலத்தின் படம் பொறிக்கப்பட்டிருந்தது, இதன் அர்த்தம் என்ன என்றால் அந்த குறிப்பு கடல் பயணம் மேற்கொள்ளும் கடலோடிகளையோ இல்லை கடல் வாணியரையோ குறிக்கும் இந்த இரண்டுமே அந்த காலகட்டத்தில் பாண்டிய நாட்டு மக்களான பரதவர்களை தான் குறித்திருக்கிறது.

கிமு 2 ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட நாணயத்தில் குறிக்கபட்ட பெயர்கள் உதிரன், தசபீடன், மகா சாத்தன், கபாதி கடலன் ஆகியன அதன் அருகில் "பரத திச" என பொறிக்கபட்டிருந்தது. அதன் மறு பக்கத்தில் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது, இதில் பரத என்று வரும் சொற்கள் அனைத்தும் பாண்டிய நாட்டையும் அதன் மக்களையும் குறிக்கும்.

தமிழர்களே திரை மீளர்கள் தானே? உலகில் முதன்முதலில் கடல் ஆமைகளின் உதவியுடன் கடல் பயணம் மேற்கொண்டு கரை திரும்பிய இனம் தமிழினம்.

இப்படி பாரத நாட்டின் மூன்று பக்கமும் நெய்தல் நிலத்தால் கடல் சூழ்ந்து காணப்படுவதாலும் அந்த நிலங்களில் வாழ்ந்து வந்த பாண்டியர்களான பரதவர்களாலும் கடல் சூழ்ந்த தென் இந்திய நிலப்பகுதியை பரத நாடு (அ) பரத கண்டம் என அழைத்தனர்.

அதுவே மருவி பாரத நாடு என்றானது.

பரதவர்களே பாண்டியர்கள்.. பாண்டியர்களே பரதவர்கள்!

எனவே,

பாண்டிய நாடு என்பதும் பரத/பாரத நாடு என்பதும் ஒன்றே!



Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?