பயங்கரவாதம் - இந்தியா

 1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின்போது வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும். இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத் தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப் படுகொலைகள் அனைத்தும் எந்தவிதமான திட்டமிட லும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ் நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று கூறலாம். ஆனால் முதன் முதலாக, சுதந்திர இந்தியா வின் நன்கு திட்டமிடப் பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படு கொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத் தினார். எனவே 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில் பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம் கோட்சே வெடி குண்டை வீசவேண்டும், கூட்டத்தில் கலந்து விட்ட மதன்லால்பாவா காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக்கடைகளிலேயே சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படு கொலையைத் திட்ட மிட்ட அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால் பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே, நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார். (மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துத்துவா தீவிர வாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த போலீஸ் அதிகாரி யின் பெயரும் ஹேமந்த் 'கார்காரே' என்பது வேடிக்கை!).

இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படு கொலையை நடத்தியது இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை" வலியுறுத் தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித் தோல்நீக்கமும் (இஸ்லா மிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை விட்டுச் செல்வன வாகவும் இருந்தன. அவர்களது நோக்கம், ஒன்று: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, கால மெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம் மக்க ளுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கர வாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு: அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர முடிந்தது: இந்துத்வா தத்துவம் என்பது சூப்பர் டூப் புரட்டு; அது உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லரின் நாஜியிசத்துக்கு நூறு சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில், தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தெரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம், எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது. இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு முதுகு வரை வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல் பேசமாட்டார் களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில்கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றை வரியோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது என்பது தற்செய லான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின் தம்பி களாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம்.

1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய கொலை வெறித்தாண்டவத்தை சொல்லலாம். இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும் கட்டாரியோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர் களைக் கொன்று குவித்த பேர்வழிகள், கடைகளைச் சூறை யாடிக் கொள்ளை அடித்தவர்கள். இதன்பின் நிகழ்ந்த மிகப் பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கர வாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யின் கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர் வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும். இந்த கொலைத்தாண்டவத்துக்கு தலைமை தாங்கி நடத்திய வர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், அதன்பின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமாக அதிகபட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார். இந்த ஆசாமி இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர்ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றார். ஆனாலும் ஆச்சரியம் இல்லை. இந்திய ஜன நாயகம் இதை அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே! தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும் கிறித்துவ, முஸ்லிம் மக்களை நடுவீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணி யாக இருந்தால் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங் களைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.


ஆர்.எஸ்.எஸ். கும்பல் பி.ஜே.பி. என்ற பெயரில் ஆட்சியில் இருந்த போது, தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துத்துவா ஆசாமிகள் நடத்தவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக் கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிபதிகள், ராணுவத்தின் உயரதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது. தேசத்தின் கல்வி, கலாச்சார, நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்று வதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி பெற்றது. கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் இடதுசாரிகள் இதுபற்றி தொடர்ந்து பேசியும் எச்சரித்தும் வந்தார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில் இத்துறைகளைக் கைப்பற்றிய இந்துத்துவாவாதிகளை வெளியேற்ற குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் செய்ய இயலவில்லை. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலில் மட்டும் சில மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. எனவே இந்திய ஆட்சியை, அதாவது அரசு எந்திரத்தை நடத்தியதும் நடத்துவதும் ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவா ஆட்கள்தான் என்று சொன்னால் தவறில்லை, உரக்கவே சொல்லலாம். நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர் காலத்திலும் அவர்கள்தான் நடத்துவார்கள்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா கும்பல் கள் செய்கின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலக மக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது, ஒரு 'பொது எதிரி' யாக அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக வைத்திருக்கின்றது.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களை இப்படி வலுக் கட்டாயமாக எதிரியாக்கியது அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு எனில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை வலுக்கட்டாயமாக எதிரியாக்கியது ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் ஆகிய இந்துத்துவா பயங்கரவாதிகளைச் சாரும். ஹெட்கே ராம் பாலிவார், கோல்வாகர், வீரசவர்க்கார், நாதுராம் கோட்சே வழியாக, ஷ்யாம ப்ரஸாத் முகர்ஜி, சுதர்சன், வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ப்ரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, ராம் கோபாலன், சோ ராமஸ்வாமி, இல.கணேசன் போன்ற தீவிர வாதிகளால் தொடர்ந்து இந்த "எதிரியாக்கல்" என்ற அஜெண்டா முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பூட்டிக்கிடந்த பாபர் மசூதியைத் திறந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பூஜை செய்ய அனுமதித்த அன்றைக்கு இவர்களின் வெற்றிப் பயணம் தொடங்கியது எனலாம். ஆனால் நாலுசுவருக்குள் வெறும் பூஜை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வி.பி.சிங் ஆட்சியின்போது அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல். தொடர்ந்து அயோத்தியில் கோவில் கட்ட தனது ரத்தயாத்திரையை நடத்தினார் அத்வானி. பீஹாரில் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்ய, வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை அத்வானி விலக்கிக்கொள்ள, மானம் என்ற வேட்டியே பெரிது என பதவித்துண்டைத் தூக்கி வீசி எறிந்து விட்டு கம்பீரமாக வெளியேறினார் வி.பி.சிங் (வேறு யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல). தொடர்ந்து வந்த தேர்தலில் பேசாமடந்தையும் ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவருமான நரசிம்ம ராவ் பிரதமராக, 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடெங்கும் கலவரம் மூண்டது. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். மும்பையிலும் கோவையிலும் குண்டு வெடித்தது ("அத்வானியை ஆண்டவன் காப்பாற்றி னான்"-ரஜினிகாந்த்). இஸ்லாமியர்களை 'வலுக்கட்டாயமாக எதிரி'யாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி கண்டது. முதலில் 'சர்ச்சைக்குரிய இடம்' என்று சொல்லி வந்த பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் நாட்கள் ஓடஓட ராமர் கோவில் என்றே எழுதவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கி னார்கள். இப்போது 'சர்ச்சைக்குரிய இடம்' என்ற சொல் ஊடகங்களில் மறைந்துவிட்டது. அடுத்துவந்த வருடங் களில், டிசம்பர் 6 தேதியில் வேண்டுமென்றே செய்யப்படும் போலீஸ் கெடுபிடிகளால் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு வளர்க்கப் பட்டது. பூட்டு ரிப்பேர், குடை ரிப்பேர், பீடி சுற்றுவது, கைத்தறி நெசவு, பாய் முடைவது, கத்தி சாணை தீட்டுவது, மீன், கருவாடு, மாமிச விற்பனை, மிஞ்சிப்போனால் பெட்டிக் கடை அல்லது வெளிநாட்டில் கூலிவேலை என்று இந்திய சமூகத்தின் விளிம்புநிலைத் தொழில்களைச் செய்து தமது அன்றாட உணவுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டிருக் கும் ஒரு சமூகத்தின் மீது 'தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு வழியைக் காட்டியது எனில், அதன் சார்பு செய்தித்தாள்களும் டி.வி.சானல்களும், விஜயகாந்த், அர்ஜூன் போன்ற 'தேஷ் பக்த' நடிகர்களின் திரைப்படங்களும் பெருமளவு அந்த வழி யில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றது.

இந்திராகாந்தியோ, ராஜீவ்காந்தியோ, நரசிம்மராவோ, வாஜ்பேயியோ, இப்போதுள்ள மன்மோஹன்சிங்கோ, ஆட்சியில் யார் இருந்தாலும் உண்மையில் இந்திய அரசு எந்திரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது இந்துத்துவாவாதிகளே. இதையும் மீறி ஹேமந்த் கார்காரே போன்ற போலீஸ் அதிகாரிகள் உண்மையைத் தேடிப்போனால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும் தொல்லை மிகப் பயங் கரமானது, பைத்தியம் பிடிக்க வைப்பது. ஒட்டுமொத்த அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் "ஒரு மதம், ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றது. போலீசிலும் ராணுவத்திலும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்ற பலர், பதவி ஓய்வு பெற்ற மறுநாளே பி.ஜே.பி. யில் சேர்ந்துவிடுகின்றார்கள் என்பது இந்த வாதத்தை வலு வாக்குகின்ற வெட்டவெளிச்சமான ஆதாரம். இதுபோன்ற அதிகாரிகள் தமது பதவிக்காலத்தில் யாருக்கு ஆதரவாக, யாருக்கு எதிராக இருந்திருப்பார்கள்? பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்பதும் மற்ற அனைவரும் முஸ்லிம்களே என்பதும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது முக்கியமான கேள்வி. ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள், கருவிகள், போர்த்தளவாடங்கள், கட்டி டங்கள் அனைத்துக்கும் ராமாயண, மஹாபாரத பக்கங்களி லிருந்துதான் சம்ஸ்கிருதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பல உதாரணங்களைக் கூறமுடியும். ரஷ்யாவில் இருந்து ட்டீ-90 ரக போர் டாங்குகள் வாங்கி "பீஷ்மர்" என்று பெயர் வைத்தார்கள்! எங்கே இருக்கின்றது மதச்சார்பின்மை? அரசு அலுவலகங்களில் பஜனைகள் (தவறாமல் வெள்ளிக்கிழமை) ஒலிக்கின்றன. சமீப காலங்களில் ஆயுதபூஜை மிகத்தீவிர மாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு அலுவலகங்க ளில் பணியாற்றும் சிறுபான்மை மத மக்கள் (தலித்களையும் சேர்த்து) "நாம் பணி செய்வது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அலுவலகத்தில்" என்று நம்ப வேண்டுமா? இது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு? இந்திய மக்களின் பணத்தில் சம்பளம் வாங்குகின்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி "பகவத் கீதைதான் இந்த நாட்டின் தர்ம நியாய சட்டமாக இருக்க வேண்டும்" என்று கொக்கரிக்கின்றார்; சேது சமுத்திர விவகாரத்தில் மத்திய சட்டஅமைச்சர் "கடவுள் ராமர் இருப் பது சந்தேகத்துக்கு இடமற்ற ஒன்று; ராமர், இந்திய கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி" என்று முழக்கமிடு கின்றார், இவர்கள்தான் சிறுபான்மை மத மக்களையும், இந்து மதத்திலேயே இருக்கின்ற தலித்துகளையும் காப்பாற்றுவார் கள் என்று நம்ப வேண்டுமா? ஒரு பந்த் நடந்தபோது "தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூரைமீது ஏறி நின்று கோஷம் போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரிசாவிலும் குஜராத்திலும் முஸ்லிம், கிறித்துவ மக்களின் கழுத்தும் வயிறும் அறுக்கப்பட்ட போதும், முஸ்லிம், கிறித்துவ பெண்கள் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு உள்ளானபோதும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் உயர்சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போனார்கள்.

புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது;'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. விடுதலை பெற்ற அடுத்த வருடமே,காங்கிரஸ்காரர்கள் காஷ்மீரில் ராணுவ ஜீப் வாங்கிய விசயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலைத் தொடங்கி வைத்து காந்தியடிகளுக்கு மகத்தானஅஞ்சலி செலுத் தினார்கள். பாரத் மாதாவின் நேரடி வாரீசுகளான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தீவிரவாதிகளோ கார்கில் போரில் இறந்துபோன இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்து வர சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலும், டெஹல்கா பத்திரிகையாளர் களால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட, பி.ஜே.பி.தலைவர் பங்காரு லட்சுமணனும் பதவியில் இருக்கின்ற ராணுவ அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கட்டுக்கட்டாக பணத்தை அமுக்கியதைக் காட்டும் ஆயுதபேர ஊழலும் தெருவுக்கு தெரு நாறியது. இவர்களின் லஞ்சலாவண்யப் பட்டியல் பக்கம் பக்கமாகப் போகும். இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே. தனித்தனியே கொள்ளை அடித்தது போதாது என்று, 2008 ஜூலை மாதம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு பேருமே ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை நாட்டுமக்களுக்குத் தெரியும்படி பகிரங்கமாகப் பங்கு போட்டுக்கொண்ட நேரடி ஒளிபரப்பை இந்திய மக்கள் பார்த்து "இவங்க எவ்வளவு நல்லவங்க" என்று பரவசம் அடைந்தார்கள். ஆக இரண்டு பேருமே தேஷ்பக்தி வேஷம் போட்டுக்கொண்டே இந்தியக்குடிமகனின் ஒவ்வொரு பைசாவையும் கூச்சநாச்சமின்றி நக்கித் தின்கிறவர்கள் என்பது வெட்டவெளிச்சம். இந்த லட்சணத்தில் இவர்கள்தான் பயங் கரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று தெருத்தெருவாக ஓலமிடுகின்றார்கள்! நாம் நம்ப வேண்டுமாம்!

நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத் தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்ப தாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளைநிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற வனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருபவர் களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இவை அனைத்தையும் பேசாமல், பொத்தாம் பொதுவாக பயங்கரவாதம் பற்றிப் பேசுவதும், மனிதாபிமானம், 'நாமெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்' என்று அடிச்சு விடு வதும், வெடிகுண்டுகள் வெடித்தபின் அந்த இடத்தைக் கழுவிவிட்டு, டி.வி.காமிராக்கள் வந்தவுடன் கையிலிருக் கின்ற மெழுகுவர்த்தியை ஏற்றுவதும், செத்துப்போன போலீஸ் அதிகாரிகள் 'தேஷ்பக்தர்'கள் என்று கோஷம் போடு வதும், அவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக யாராவது சொன்னால் உடனடியாக 'நீ தேச விரோதி' என்று கூச்சல் போடுவதும், ஒவ்வொரு முறை குண்டுவெடித்த பின்னாலும் டி.வி.சானல்களில் ஜாக்கிரதையாக காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ். வகையறா ஆட்களை உட்கார வைத்து பொத்தாம் பொதுவாக தேஷ்பக்தி பேசி "நாங்க வேற வேற கட்சின்னாலும் தேஷ் பக்தின்னா ஒண்ணா இருப்போம், பாருங்க" என்று பீத்திக் கொள்வதும், 'மீண்டும் அடுத்தவாரம் இதே நேரத்தில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பின்போது சந்திப்போம்' என்று வணக்கம் கூறி விடை பெறுவதும் எதுக்கும் பிரயோசனப் படாது.

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?