Posts

Showing posts from September, 2022

meme 23 -09-2022

Image
 

இந்திய பாராளுமன்ற கட்டிடம்

Image
மோடி அரசு இப்போது கை கழுவி விட்டு செல்லும் இந்திய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் சர் எட்வர்ட் லுட்யன்ஸ் ஆல் வடிவமைக்க பட்டது. இதில் முக்கியமான விஷயம் . இது மத்திய பிரதேசம் மித்தோலி கிராமத்தில் இருக்கும் சவுசாத் யோகினி ஆலயம் என்ற இந்து கோவிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது. இந்து மதத்தை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இவ்வளவு தான். புதிய கட்டிட மாதிரியில் இப்படி எந்தவித அம்சமும் இல்லை. டிசைனர் குஜராத் மாநிலம் சேர்ந்தவர். என்ன ஒரு தாராளம். இன்றைய பாராளுமன்றம் நல்ல வலிமையாக உள்ளது. அதிகமாக உறுப்பினர்கள் இருக்க இடமில்லை என்பது போலியான வாதம். இவர்களுடைய உண்மையான நோக்கம் எல்லா விதத்திலும் தங்கள் அடையாளம் மற்றும் முத்திரை பதித்து வைப்பது தான். வெறும் ஆணவம். அதிகார போதை.

MEME - 11-09-2022

Image
 

கேஷ் (Cash) - சொல்லின் மூலம்

Image
  கேஷ் (Cash) - என்ற சொல்லின் மூலம் தமிழா? பணத் தொகையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ' Cash ' - மட்டுமல்ல, நாணயத்தைக் குறித்த ' Coin ' - என்ற சொல்லும் தமிழ் மூலத்திலிருந்தே தோன்றியவையே! காசு  - என்ற சொல் எங்கிருந்து வந்தது? காய் /காய்ச்சுதல் - என்றால் உருக்குதல், வெப்பத்தால் இளக்குதல் என்று பொருள். காய்ச்சு = உலோகத்தைக் ' காய்ச்சி ' வடிவமைக்கப்பட்டது, செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய மாழையைக் காய்ச்சி உருவானது காசு. காய் > காய்ச்சு > காசு > CASH. காய் < COIN. துக்கடா  : உரு ' க்கிய  உரு வம் > காசு > உரு. உரு > உருவா > ரூபா > ரூபாய் > RUPEE. உரு + ஒக்கு +அம் > உருக்கம் > ரொக்கம்.

கெட்டி பொம்முலு என்கிற கட்டபொம்ம நாயக்கன்

Image
  "வரி, வட்டி, கிஸ்தி... யாரை கேட்கிறாய் வரி ...எதற்கு கேட்கிறாய் வரி.. வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..உனக்கேன் கட்ட வேண்டும் வரி." 1959 ல் வெளியான சிவாஜி கணேசன் நடித்த வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்து விட்டு அது தான் கட்டபொம்மனின் உண்மை வரலாறு என்று நினைத்திருந்தால் அந்தோ பாவம் அது தான் இல்லை , அந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப்பிழை. கெட்டி பொம்முலு என்கிற கட்டபொம்ம நாயக்கனின் உண்மை வரலாறு, கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு அப்போ அந்த நீண்ட தமிழ் வசனம் ? அடடா வடை போச்சா ? அதற்கு உண்மையான சொந்தக்காரன் பூலித்தேவன் , மாபொ சி அவர்கள் செய்த வரலாற்று பிழை பூலித்தேவனின் உண்மை வசனத்தை கெட்டி பொம்முலுக்கு போட்டு படத்தில் வசனத்தை சூடு பிடிக்க செய்தது. கட்டபொம்மனின் பரம்பரை பின்வருமாறு, * கட்ட பிரமையா – குலமுதல்வன் *கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் – கொள்ளுப் பாட்டன் (காலம் 1709 – 1736) *பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் – பாட்டன் (காலம் 1736 – 1760) *இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் – தந்தை (காலம் 1760 – 1790) *வீரபாண்டிய கட்டபொம்மன் – கதை நாயகன் (காலம் ...

மனு ஸ்மிரிதி - நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள் கருத்து

  பெண்களையும், உழைக்கும் மக்களையும் சூத்திரர்கள்(விபசாரிகள், விபசாரிமக்கள்) என்று தூற்றி, அம்மக்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லும் மனு ஸ்மிரிதி சூத்திரங்களைக் கண்டித்து நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் நிறையப் பாடியுள்ளார்கள்! திருமாற்பேறு என்னும் சிவத்தலத்தில், பிராமணர்களின் கொடுமையைக் கண்டு மனம் பொறாமல், நாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமான், பார்ப்பனர்களை, "சழக்கர்களே!" என்று திட்டித் தீர்க்கும் தேவாரப் பாடல் ஏழாம் நூற்றாண்டில், பார்ப்பன ஆரியக் கூத்தின் கொடுமையை படம் போட்டுக் காட்டுகிறது. சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவன் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே - அப்பர் தேவாரம் 1674. சித்தர் சிவவாக்கியர் பெண்ணைத் தீட்டு-தூமை என்று தூற்றும் ஆரியப் பார்ப்பானை மானங்கெட்ட கேள்வி கேட்டு நாறடிக்கும் பாடல் பாடியிருப்பதைக் கேளுங்கள்: மாதமாதம் தீட்டு என்று பெண்ணை இருட்டறையில் தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும் வேதம் ஓதும் வேதியா! நீயே தீட்டு நின்றுபோய் வளர்ந்த கருப் பிண்டம்தானே? அப்படி தீட்டுத்...