மனு ஸ்மிரிதி - நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள் கருத்து

 பெண்களையும், உழைக்கும் மக்களையும் சூத்திரர்கள்(விபசாரிகள், விபசாரிமக்கள்) என்று தூற்றி, அம்மக்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லும் மனு ஸ்மிரிதி சூத்திரங்களைக் கண்டித்து நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் நிறையப் பாடியுள்ளார்கள்!

திருமாற்பேறு என்னும் சிவத்தலத்தில், பிராமணர்களின் கொடுமையைக் கண்டு மனம் பொறாமல், நாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமான், பார்ப்பனர்களை, "சழக்கர்களே!" என்று திட்டித் தீர்க்கும் தேவாரப் பாடல் ஏழாம் நூற்றாண்டில், பார்ப்பன ஆரியக் கூத்தின் கொடுமையை படம் போட்டுக் காட்டுகிறது.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே - அப்பர் தேவாரம் 1674.

சித்தர் சிவவாக்கியர் பெண்ணைத் தீட்டு-தூமை என்று தூற்றும் ஆரியப் பார்ப்பானை மானங்கெட்ட கேள்வி கேட்டு நாறடிக்கும் பாடல் பாடியிருப்பதைக் கேளுங்கள்:

  • மாதமாதம் தீட்டு என்று பெண்ணை இருட்டறையில் தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும் வேதம் ஓதும் வேதியா!
  • நீயே தீட்டு நின்றுபோய் வளர்ந்த கருப் பிண்டம்தானே?
  • அப்படி தீட்டுத் தூமை திரண்டு உருவாகாவிட்டால், நீ பேசும் நாதம் ஏது? வேதம் ஏது?
  • நற்குலங்கள் என்று பீத்துகிறாயே - அவைகள் ஏது? இவைகள் யாவும் விளைந்தது எப்படி என்று சொல்லடா!"

என்று ஓட்டு - ஓட்டு என்று ஓட்டுகின்றார் ஆரிய வேதப் பார்ப்பனர்களை! இதோ பாடல் உங்களுக்காக!

"மாதமாதம் தூமைதான்! மறந்துபோன தூமைதான்!
மாதம் அற்று நின்றலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா?
வேதம் ஓதும் வேதியா! விளைந்தவாறு பேசடா!" - சித்தர் சிவவாக்கியர்! [4]

இன்னும் பலபடி மேலே போய், அட மூட வேதியனே!

  • நீ தீட்டு என்றும், தூமை என்றும் நீ அருவெறுத்து ஒதுக்குகிறாயே,
  • அந்த தீட்டும், தூமையும் திரண்டுருண்ட துர்நாற்றப் பிண்டங்கள்தாம் வளர்ந்து உன் முன்னர் நிற்கும்
  • சொற்குருக்களும்(வேத விற்பன்னன்) ,
  • மெய்க்குருக்களும்(வேதாந்த ஞானி),
  • சற்குருக்களும்(சத்குரு) என்று அறிந்து கொள்!

அத்துணை வேதக் குருக்கள் கூட்டமும் திரண்ட தூமையான தீட்டுப் பிண்டங்கள் என்பதை அறிந்து கொள்ளடா மூட வேதியனே! என்று திட்டித் தீர்க்கிறார் சித்தர் சிவவாக்கியர் இந்தப் பாடலில்:

"சொற்குருக்கள் ஆனதும்! சோதிமேனி ஆவதும்!
மெய்க்குருக்கள் ஆனதும்! வேணபூசை செய்வதும்!
சற்குருக்கள் ஆனதும்! சாத்திரங்கள் சொல்வதும்!
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே!" - சித்தர் சிவவாக்கியர்! [5]

'ஆளைச் சொல்! 'RULE'-ஐச் சொல்கிறேன்!

  1. "நீ 'குற்றம் செய்த ஆளின் சாதி' யாதென்று சொல்!
  2. நான் 'அவன் பிறந்த சாதியைப் பொறுத்து அவனுக்கு தண்டனை என்ன என்று சொல்கிறேன்"
  3. என்ற சாதிக்குச் சாதி நீதியை மாற்றிச் சொல்லும் மொள்ளமாறி மனுவின் சட்டங்கள்' என்று வேண்டுமானால் மொழி பெயர்க்கலாம்"
  4. என்று மனுஸ்ம்ரிதி நூலில் 'நூல்-அயோக்கியத்தனத்தை'த்

தோலுரித்துக் காட்டுகிறார் மனோன்மணியம் சுந்தரனார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாயிரத்தில், மனோன்மணியம் சுந்தரனார், திருக்குறளை தெளிவாகப் படித்தவர்கள், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று அநீதி சொல்லும் மநுவாதி நூலை மனதில் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள் என்று பாடிய செய்யுளைக் காணுங்கள்!

"வள்ளுவர் செய் திருக்குறளை மருவர நன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி? ஒருசாதிக்கு ஒருநீதி!" - 
மனோன்மணியம் சுந்தரனார்.

மனோன்மணியம் சுந்தரனாரின் 'சைவசமயத்திடம்' தோற்றுப்போனது விவேகானந்தரின் இந்துத்துவம்!

திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபையில் சுவாமி விவேகானந்தர் 'நாமெல்லாம் இந்துக்கள்' என்று உரையாற்றியபோது,

  1. "நாங்கள் சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வணங்கும் சைவ சமயிகள்!
  2. ஆரிய வேதத்தை முதன்மையாகக் கொண்ட இந்துக்கள் அல்லர்!"
  3. என்று ஆதாரங்களுடன் மனோன்மணியம் சுந்தரனார் பதில் கொடுத்தபோது,
  4. ஏதும் மறுத்துப் பேச இயலாமல், சுவாமி விவேகானந்தர் தமது உரையைச் சுருக்கிக்கொண்டு விடைபெற்றார்

என்பது வரலாறு!

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?