சாமானிய பிறப்பு - சாதனை மரணம் - யார் இவர்?

 சாமானிய பிறப்பு - சாதனை மரணம் - யார் இவர்?

  • சமூகநீதி, மாநில உரிமை, மொழி உரிமை, தொடர்பான சிந்தனையாளர்
  • அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர்
  • தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்
  • எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டியவர். 
  • ஒரு பண்பாட்டின் குறியீடாக விளங்கியவர் 
  • கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் ஆரியர்களின் மேன்மையை பேசுகின்றன என்று வாதிட்டவர் 
  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, என்ற சொல்லாடல் கொண்ட தொடரை  தமிழில் முதன் முதலில் பயன்டுத்தியவர்
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல என்ற சொல்லாடல் கொண்ட தொடரை தமிழில் முதன் முதலில் பயன்டுத்தியவர்
  • பஞ்சாயத்து சமிதி என்ற சொல் ஊராட்சி ஒன்றியம் ஆனதும்
  • காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும்
  • மந்திரி அமைச்சர் ஆனதும்
  • சட்டசபை சட்டப்பேரவை ஆனதும், இவரால்தான் 
  • பழமையான செம்மொழியை மீட்டெடுத்து அதைப் புதிய அரசியலுக்கு பயன்படுத்தியது 
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சமரச கொள்கையை வலியுறுத்தியது 
  • மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை வேண்டும் என வாதிட்டவர் 
  • மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை வலியுறுத்தியவர் 
  • பதவியேற்கும்போது , இறைவனின் பெயரால் பதவி ஏற்கிறேன் என்ற வழமையிலிருந்து மாறி உளமாற பதவி ஏற்கிறேன் என உறுதி கூறி பதவியேற்றவர் 
  • 1969 பிப்ரவரி 3ஆம் தேதி அவர் இறந்த போது அது பல கோடி மக்களுக்கு பெரும் துயரம்.
  • இறுதி ஊர்வலத்திற்கு சென்னையில் குவிந்துவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடி, இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவானது.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?

அறிஞர் அண்ணா என்று அன்பாக அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை  தான் இந்த பெருமைக்கு உரியவர்.

சாமானிய பிறப்புக்கும் சாதனை மரணத்துக்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கையானது வரலாற்று திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல, வரலாற்றை திருப்புவதாக அமைந்ததும் கூட.

சமூகநீதி, மாநில உரிமை, மொழி உரிமை, தொடர்பான சிந்தனையாளர். அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிக்கை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும் கையில் எடுத்து, அதற்கு புதிய தோற்றமும் உள்ளடக்கமும் தந்தவர். இந்த ஊடகங்களில் சில திராவிட இயக்க படைப்பாளிகளும் அணியணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவின் முதல் அமைச்சர் ஆன இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அதன்மூலம் அடித்தளமிட்டவர்

நவீன தமிழின் மீது மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்க படாதது.  தங்களை ஒரு தனித் தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அசைக்கமுடியாத ஒரு அங்கீகாரம் ஆகிவிட்டது இந்த பெயர். அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாக விட்டது. அது ஒரு வரலாறாக அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் உள்ளன, ஆனாலும் கூட நவீன தமிழ் நாட்டின் மொழி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய தாக்கத்தின்  பரிமானத்தோடு ஒப்பிடும்போது இந்த அங்கீகாரம் குறைவே.

 யார் இந்த அண்ணா?

காஞ்சிபுரத்தில் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். அப்போது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன் அவ்வளவுதான்.

இளமைப் பருவம்

அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா தமது சித்தி ராஜாமணிால் வளர்க்கப்பட்டார் அவரது குடும்பம் கடவுள் நம்பிக்கை மிகுந்த குடும்பம் எனவே இயல்பிலேயே அண்ணாவும் சிறுவயதில் கடவுள் நம்பிக்கை மிக்கவராக இருந்தார். பின்னாளில் தமிழ்நாட்டின் பிரபலமான நாத்திக தலைவரான அண்ணா சிறுவயதில் பிள்ளையார் பக்தர் என்ற தகவலை தெரிவிக்கிறது அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் எழுதிய அண்ணா வாழ்க்கை வரலாறு நூல்.

 காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்து சராசரி மாணவரை போலவே பள்ளிப்படிப்பை முடித்த அண்ணாவுக்கு இந்த பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்கே அவர் சந்தித்த ஆங்கில பேராசிரியரும் நீதிக்கட்சியில் செயல்பட்டவருமான வரதராஜன் தான் அரசியலின் பக்கம் அண்ணாவின் கவனத்தை  திருப்பியவர்.

மண்ணடியில் இருந்த பேராசிரியர் வரதராஜனின் சிறிய நெரிசலான அறையில் எப்போதும் மாணவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள் அதுதான் அண்ணாவுக்கு குருகுலம் போல அமைந்த இடமென அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய ஆர் கண்ணன் குறிப்பிடுகிறார். வரதராஜன் ஒன்று சேர்ந்து பேராசிரியர் வேங்கடசாமி என்பவரும் அண்ணாவிடம் அரசியல் ஈடுபாடு ஏற்பட காரணமாக இருந்தவர் என்கிறார் கண்ணன்.

மோசூர் கந்தசாமி முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்கள் தான் அண்ணாவுக்கு சங்கத் தமிழை கற்பித்தனர். அவர்களிடம் கற்ற சங்கத்தமிழ் தான் பின்னாளில் அண்ணாவின் புகழ் பெற்ற மேடை தமிழுக்கு அடிப்படையாக அமைந்தது. அண்ணாவுக்கு அப்போது மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க முடியாத குடும்ப சூழ்நிலை நிலவியது. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்ன தம்பிப் பிள்ளை அவரை BA Honours  படிக்கும்படி வலியுறுத்தினார். கல்வி உதவித்தொகை கிடைக்க பாடநூல் வாங்கவும் உதவுவதாக அவர் ஒப்புக் கொண்ட பிறகுதான் அண்ணா 1931ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பிஏ Honours படிப்பில் சேர்ந்தார்.

ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் ஓராண்டுக்கு முன்னரே அதாவது அவரது 21-வது வயதில் அண்ணாவுக்கும் ராணி அம்மையாருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இந்த இணையருக்கு குழந்தை இல்லை என்பதை தவிர இல்லறம் நல்லவிதமாகவே சென்றதாக ராணியை மேற்கோள் காட்டிச் சொல்கிறார் ஆர் கண்ணன். கல்லூரியில் தவறாமல் வகுப்பு எடுத்துச் செல்கிற அண்ணா, தீவிரமான படிப்பாளி நீண்ட நேரத்தை நூலகங்களில்  செலவழிக்கிறவர். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றவர். அந்த நாட்களில் தமக்கு இதழியலில் ஈடுபாடு இருந்தது என அண்ணாவே பிற்காலத்தில் சொல்லியிருக்கிறார். கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அண்ணா 1931ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் கல்லூரி பொருளாதாரத் துறை மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். 

படித்து முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக 6 மாதம் பணி செய்த பிறகு சென்னை கோவிந்தப்ப நாயக்கன், நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே பிராமணரல்லாதோர் அரசியல் இயக்கமாக இருந்த நீதிக்கட்சி செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கி விட்டார்

அரசியல் வாசம் 

அது நீதிக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டிருந்த காலம், ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட பிராமணரல்லாதோர் நலனுக்கான திட்டங்களை நீதிக்கட்சி அரசு செயல்படுத்தி இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியை அவர்கள் ஆதரித்தனர். அரசு பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை அமர்த்துவது கல்வியை பரவலாக்குவது ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால் நீதிக்கட்சித் தலைவர்கள் பலர் நிலவுடைமையாளர்கள், பிரிட்டிஷ் அரசில் பதவி பட்டங்கள் தாங்கியவர்கள், இது அவர்களை எளிய மக்களிடமிருந்து அந்நியப்படுத்திய காலமது. ஆனால் பிராமணரல்லாதோர் அரசியலுக்கு என்று இருந்த ஒரே கட்சி நீதி கட்சி தான் என்பதால் அண்ணாவுக்கு

வேறு தேர்வு இருக்கவில்லை. அண்ணாவின் நீதிக்கட்சி தொடர்பு அவருக்கு ராஜாக்களும், பெரும் பணக்கார கனவான்களோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ஆனால் சாமானியர்களை பற்றிய  கவலைகளோடு, சமூகப் பாகுபாடுகளை அகற்ற பாடுபட்டு வந்த,  அலங்காரங்கள் இல்லாமல் கடும் மொழியில் பேசி விடக்கூடிய பெரியார் ஈ.வே ராமசாமி தான் அண்ணா தன் தலைவராக தேர்ந்தெடுத்தார். 1935ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதன்முதலாக சந்தித்தார் அண்ணா. அப்போது முதல் பெரியார் அண்ணாவின் தலைவரானார். 

அப்போது நடந்த உரையாடலை 1949ஆம் ஆண்டு நடந்த திமுக தொடக்க விழாவில் அண்ணா இப்படி நினைவுகூர்ந்தார். பெரியார் என்னை பார்த்து என்ன செய்கிறாய் என்று கேட்டார்? படிக்கிறேன், பரீட்சை எழுதி இருக்கிறேன் என்றேன் உத்தியோகம் பார்க்க போகிறாயாஎன்று கேட்டார், இல்லை உத்தியோகம் விருப்பமில்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம் என்று பதில் அளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவராக, நான் அவருக்கு சுவீகார புத்திரன் ஆகிவிட்டேன்.” இப்படித்தான் அந்த நிகழ்வில் குறிப்பிட்டார் அண்ணா

இப்படித்தான் அந்த நிகழ்வைக் குறிப்பிட்டார் அண்ணா 1937 ஆம் ஆண்டில் ஈரோடு சென்ற அண்ணா, அங்கு பெரியாரின் குடியரசு மற்றும் விடுதலை நாளிதழில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலை சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 28 அந்த வயதில் அண்ணாவின் திறமையை கண்டு வியந்த பெரியார் அதே ஆண்டு துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை அண்ணாவுக்கு அளித்தார். அதே ஆண்டில் இன்னொரு முக்கிய சம்பவமும் நடந்தது, சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்த ராஜாஜி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி கற்பது கட்டாயம் என்று ஆக்கினார். இதை எதிர்த்து பெரியார் போராட்டம் அறிவித்தார். பெரியார் அண்ணா ஆகியோர் 1938ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு நான்கு மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்தார். அப்போது தமிழ்நாடு என்ற மாநிலமே உருவாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருக்கும்போது தான் பெரியாருக்கு நீதிக்கட்சித் தலைவர் பதவியும் தரப்பட்டது. இதுவே பின்னாளில் நீதிக்கட்சி யையும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து 1944ல் திராவிடர் கழகமாக ஆக்குவதற்கு வழிகோலியது. நீதிக்கட்சி, திராவிடர் கழகத்திலும் பெரியாரின் தளபதியாக இருந்தார் அண்ணா.

இந்திய சுதந்திரம் குறித்து ஆலோசிக்கவும் இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காகவும் 1947 இல் இந்தியா வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவை சந்தித்து திராவிட நாட்டை தனிநாடாக அங்கீகரிக்க பெரியார் கோரிக்கை வைத்தார். அந்த சந்திப்பின்போது அண்ணா உடன் இருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் குறித்து அண்ணாதுரை மரணத்திற்கு பிறகு பேசிய evk.சம்பத் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஏற்றுக்கொள்ளாததால் திராவிட நாடு கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்பு நழுவி விட்டது என்று அண்ணா நினைக்கத் தொடங்கினார் எனக் குறிப்பிட்டார். ஆனால் திராவிட நாடு என்ற லட்சியத்தை அண்ணா அத்துடன் கைவிடவில்லை. தன்னுடைய பத்திரிக்கைக்கு திராவிட நாடு என பெயர் வைத்தார். அந்த திராவிட நாடு என்ற லட்சியத்தில் தடையாக இருந்த விஷயங்கள் எதுவென அவரும் பெரியாரும் நினைத்தார்களோ, அதற்கெல்லாம் எதிராக அண்ணா தீவிரமாக செயல்பட்டார். கம்பராமாயணம் பெரியபுராணம் ஆகிய நூல்கள் திராவிடர்கள் மீது ஆரியர்கள் வட இந்தியர்களின் ஆதிக்கம் செலுத்த வழி செய்வதாகவும், அவை அறிவுக்கு புறம்பாக இருப்பதாகவும், பெரியாரும் அண்ணாவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். இவர்களின் கருத்துகளால் ஏராளமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். ஆனால் நீதிக்கட்சியின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், சைவ-வைணவ மதப்பற்றாளர்கள், இதனால் பதட்டமடைந்து, இந்த கருத்தை எதிர்த்தார்கள். கம்பராமாயணம் பெரிய புராணம் என்ற இரண்டு நூல்களையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று வாதிட்டார் அண்ணா. இந்த கருத்தை எதிர்த்தார் தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், ஆகிய இருவரும் சேர்ந்து 1943ஆம் ஆண்டு அண்ணா தனித்தனியாக நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு தரப்பும் மிகவும் மரியாதையான முறையில் நாகரீகமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து வாதிட்டனர். இலக்கிய வழக்காக கம்பராமாயணத்தை ஏற்கவேண்டும் என்று வாதிட்ட அவர்களுக்கு, அண்ணா சொன்ன பதில் இதுதான். முஸ்லிம்கள், தங்கள் வாழ்க்கை முறையும் வேறுபட்டது என்று நிரூபிக்க முடிந்தால் தான் இரண்டே ஆண்டுகளில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்களால் முன்னெடுக்க முடிந்தது, ஆனால் தமிழர்கள், ஆரியர்களின் வாழ்க்கை முறையையும் கலைகளையும் தங்களுடையது என்று ஏற்றுக் கொண்டதால் தன்னாட்சிக் தன்மானத்துக்கு அவர்களால் போராட முடியவில்லை, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் ஆரியர்களின் மேன்மையை பேசுகின்றன. தங்களைத் தாங்களே திராவிடர்கள் சிறுமை ஆக்குவதாக வாதிட்டார்.

இந்த விவாதம் தீ பரவட்டும் என்ற பெயரில் நூலாக வெளியாகி பிரபலமடைந்தது. ஆரியமாயை, நீதிதேவன் மயக்கம், கம்பரசம் போன்ற சிறு நூல்களை எளிய நடையில் எழுதி வெளியிட்டார். கம்பராமாயணத்தில் இருக்கும் ஆபாசமான பகுதிகள் என்று தான் கருதியவற்றை கம்பரசத்தில் விமர்சித்தார் அண்ணா. 

ஆனால் மொழிநடை, அழகிய சொற்கள் ஆகியவற்றை தேடுகிறவர்கள் கம்பராமாயணம், திருவாசகம் ஆகியவற்றை படிக்கலாம் என்று கூறிய அண்ணா, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார். எதிரிகளின் நேர்மறை பண்பை ஏற்கவேண்டும் என்று சொல்வதற்கு அண்ணாவின் இந்த வாசகம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

 

பெரியாரின் உறவில் விரிசல் 

 சரி அண்ணாவுடன் பெரியாருக்கு முரண்பாடு ஏற்பட்டது ஏன்? திராவிடர் கழகத்தினர் கட்டாயம் கருப்புச் சட்டை அணியவேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணா விரும்பவில்லை. இதனால் சுயமரியாதை இயக்கத்தினர் சமூகத்தில் தனிமைப்படுத்த படுவார்கள் என்று அண்ணா கருதினார். சில கூட்டங்களுக்கு அண்ணாவே வெள்ளை சட்டையில் வந்து பேசியது பெரியாரை எரிச்சல் படுத்தியது. அண்ணாவின் புகழ் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட முடியாதவராக இருந்தார். எதையும் வலுவாக, ஆனால் நாசுக்காக பேசும் அண்ணாவின் திறமை காரணமாக மாற்றுக்கருத்து உடையவர்களையும் கவரும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

இப்படிப் பல விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் அண்ணா இடையே விரிசல் அதிகமானது. இந்த நிலையில் பிரிட்டிஷாரிடம் இருந்து நேரடியாக பாகிஸ்தான் போல திராவிட நாடு என்பதை தனி நாடாக்கி விடுதலை பெற வேண்டும் என பெரியார் மேற்கொண்ட முயற்சி தோற்றுப்போனது. 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா விடுதலைப் பெற்றது. வட இந்தியர்களிடம், திராவிடர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டதாக கூறி இதை பெரியார் துக்க தினம் என வர்ணித்தார். ஆனால் இதை ஒரு சுதந்திரமான நாட்டுக்கான,  ஒரு ஜனநாயக அரசியலுக்கான வாய்ப்பாக அண்ணா பார்த்தார். இந்நிலையில் 70 வயதை கடந்த பெரியார் தன்னை விட சுமார் 40 வயது குறைந்தவராக மணியம்மையை திருமணம் செய்ய முடிவெடுத்தது திராவிடர் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இது கட்சிக்கு அவப்பெயர் கொண்டுவரும் என்று விமர்சனம் எழுந்தது. இது வெறும் திருமணம் மட்டுமல்ல, பெரியார் தனக்குப் பிறகு தனது மனைவியை தலைவராக பார்க்கிறார் என்ற விமர்சனமும் வந்தது.

திராவிட முன்னேற்ற கழகம் 

இந்நிலையில் அதிருப்தியாளர்கள் கூடி 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினர் அண்ணா. அதன் பொதுச்செயலாளர் ஆனார். பெரியார், புதிய கட்சியை கடுமையாக விமர்சித்தார். முதலில் திராவிடர் கழகத்தின் போலவே தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கமாகவே திமுக இருந்தது. பிறகு 1957 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் பங்கேற்று 15 எம்எல்ஏக்களை வென்றது. காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார். 2 எம்பி  களும்  வென்றனர். 1962ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால் அண்ணா தோல்வியடைந்தார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அங்கு அவர் ஆற்றிய முதல் உரை புகழ் பெற்றது. திமுகவை தோற்றுவித்த போது அதன் கொள்கையாக நாத்திகம் இருக்கவில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சமரச கொள்கையை அண்ணா வெளிப்படுத்தினார். இது தீவிரமாக  விமர்சிக்கப்பட்டது. நான் பிள்ளையாரையும் உடைக்க  மாட்டேன், அதற்கு தேங்காய் உடைக்க மாட்டேன் என்ற அண்ணாவின் வாசகம் வெகுஜன அரசியலில் பெற்ற நிலைப்பாடாக, அதேநேரம் மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாடாக இருந்தது.

அண்ணாவின் திரைப்பட வாசம் 

இதற்கிடையில் அண்ணாவுக்கும் திரைப்படங்களுக்கும் இருந்த தொடர்பை குறிப்பிட்டே ஆகவேண்டும். அண்ணாவுக்கு முன்பே உடுமலை நாராயண கவி, பாரதிதாசன் போன்ற திராவிட இயக்க சிந்தனை உள்ள கவிஞர்கள் சினிமாவுக்குள் நுழைந்து விட்டனர். ஆனால்  1948 ஆம் ஆண்டு நல்லதம்பி படத்திற்கு வசனகர்த்தாவாக அண்ணா திரைத்துறையில் நுழைந்த போது அது திராவிட இயக்கத்துக்கும் திரைத்துறைக்குமே முக்கியமான திருப்புமுனையாக, பண்பாட்டு மாற்றமாக இருந்தது என்கிறார் திரைப்படம் குறித்து முனைவரும், ஆய்வு செய்தவரும், தமிழ் பேராசிரியருமான இரா முருகன். நல்லதம்பி, அண்ணா வசனம் எழுதி இருந்தாலும், 1949 ஆம் ஆண்டு அண்ணாவின் கதை வசனத்தில் வெளியான வேலைக்காரி படம்தான் உண்மையில் திரைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

அதற்கு முன்பு காவிய படங்கள், அரசர்களைப் பற்றிய படங்கள், தெய்வங்களைப் பற்றிய படங்கள், வந்து கொண்டிருந்த நிலையில் அண்ணாவின் வேலைக்காரி தான் சாமானிய மனிதர்களை பற்றிய கதையை தமிழ் திரைத்துறையில் பேசிய முதல் படம். முருகன், தெய்வீகமான, காவியமான, பெயர்களைத் தாங்கிய படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் வேலைக்காரி என்ற பெயரே அந்த காலத்தில் சினிமா துறையில் புரட்சிகரமானது  என்கிறார் பேராசிரியர் முருகன்.

சரி அண்ணா திராவிட நாடு கோரிக்கையை எப்போது கைவிட்டார்? திமுக கட்சி தன்னுடைய திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை நீண்டகாலம் கைவிடாமல் இருந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு பிரிவினை கோரும் அமைப்புகள் இந்தியாவில் தேர்தலில் பங்கேற்பது தடை செய்யும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியது. இந்த 16வது அரசமைப்புச் சட்டத் திருத்தமே திமுகவை குறிவைத்து கொண்டுவரப்பட்டது தான் என்று குறிப்பிடுகிறார் மூத்த வழக்குறைஞர் அபிநவ் சந்திரசூட். இதையடுத்து திமுக திராவிட நாடு கொள்கையை  கைவிடுவதா அல்லது தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிடுவதா என்ற சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சனை 1963 ஜூன் 8 9 10 தேதிகளில் நடந்த திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கி மிக நீண்ட உரையை அண்ணா ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வைத்து பொதுக்குழுவில் வாசித்தார். இந்த தமிழ் உரையை பின்னாளில் கருணாநிதி எண்ணித் துணிக கருமம் என்ற பெயரில் தனி நூலாக பதிப்பித்து வெளியிட்டார். முடிவில் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, திராவிட நாடு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கைக்கான காரணம் அப்படியே இருப்பதாக தெரிவித்தார் அண்ணா. இதன் பிறகு திராவிட நாடு கோரிக்கை, மாநில சுயாட்சிக்கு ரீதியாக மாற்றம் பெற்றது. மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை வேண்டும் என வாதிட்டார் அண்ணா. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது அண்ணாவின் புகழ் பெற்ற முழக்கம். 

அண்ணா முதல்வர் 

இதன்பிறகு 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா தலைமையிலான திமுக தீவிரமாக ஈடுபட்டது போராட்டம் வன்முறையாக மாறிய போது அண்ணா போராட்டத்தை நிறுத்தினாலும் கூட, அந்தப் போராட்டம் திமுக ஆட்சிக்கு வருவதற்கான உந்து விசையாக மாறியது. அத்துடன் விலைவாசி உயர்வு போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளும் பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலையை உருவாக்கி இருந்தனர். ராஜாஜி தலைமையிலான சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக பெருவெற்றி பெற்றது. 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணா முதல்வரானார். 

தமிழ்நாடு உதயம் 

அண்ணாவும் அமைச்சர்களும் இறைவனின் பெயரால் பதவி ஏற்காமல் உளமாற என உறுதி கூறி பதவியேற்றனர். வெற்றி பெற்ற பிறகு 18 ஆண்டுகால பிரிவுக்குப் பின் பெரியாரை சென்று பார்த்தார் அண்ணா. தங்கள் தேர்தல் வெற்றியை பெரியாருக்கு சமர்ப்பிப்பதாக அவர் கூறினார். அதன் பிறகு திமுக மற்றும் அண்ணா மீதான பகை விட்டார் பெரியார். சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. 

புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகியவை அவரது குறுகிய கால ஆட்சியின் சாதனைகள். திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆன ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு பிறகு நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது. சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது. அண்ணா சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தமது எளிமையான வீட்டிலேயே வாழ்ந்தார்.

ஒருவர் வைத்திருக்கக்கூடிய நில அளவுக்கான உச்சவரம்பை 30 ஏக்கரில் இருந்து 15 ஏக்கராக குறைத்து சட்டம் இயற்ற அண்ணா நடவடிக்கை எடுத்தார். அந்த நடவடிக்கை அவரது மரணத்திற்குப் பிறகே நிறைவடைந்தது. அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் மிகை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 236 நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன என்கிறார் கண்ணன்.

முதலிரண்டு, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியது அண்ணாவின் சாதனை. இதையடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கையாக இரு மொழிக் கொள்கையும் அண்ணா கொண்டு வந்தார். 1968 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கே உரையாற்றினார் அண்ணா. அதே ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. சிகிச்சைக்காக அண்ணா செப்டம்பர் 10-ஆம் தேதி அமெரிக்காவுக்கு கிளம்பினார். அவரை நேரில் வந்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார் பெரியார். சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பிய பிறகும் அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது.

1969 ஜனவரி இறுதியில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் பிப்ரவரி 3-ஆம் தேதி அதிகாலை 12 20க்கு அண்ணா காலமானார். தஞ்சையை அடுத்த கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்ட நிகழ்வு அவரது ஆட்சிக்காலத்தில் 1968 டிசம்பர் 25ஆம் தேதி நடந்தது. இதுதொடர்பாக அண்ணா எடுத்த நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன, ஆனால் அப்போது அண்ணா மிகவும் உடல் நலிவுற்று இருந்தார். அமைச்சர்களை அந்த இடத்துக்கு அனுப்பி நடவடிக்கையை துரிதப்படுத்தினார் ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அண்ணா சுமார் ஒரு மாதத்தில் இறந்து விட்டார், எனவே அண்ணாவின் நடவடிக்கையில் இந்த சம்பவத்தில் மதிப்பிட முடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

தமிழ் பணி 

அண்ணாவைப் பற்றி குறிப்பிடும்போது தமிழையும் அவரையும் பிரிக்க  முடியாது. தற்காலத் தமிழ் மொழி மீது அண்ணா செலுத்திய தாக்கம் அளப்பரியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல என்ற தொடரை பலரும் பழமொழி எனக் கருதி இருக்கலாம், ஆனால் இது அண்ணாவின் சொல்லாட்சி. உறுப்பினர் என்ற சொல் தமிழுக்கு அண்ணாவின் கொடை என்று தமிழ் ஆட்சிமொழி துறை அலுவலர் ஒருவர் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழில் ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் கலந்து மணிப்ரவளம் என்று சொல்லக்கூடிய கலப்பு மொழியாகி விட்டிருந்த நிலையில், அந்த சமஸ்கிருதச் சொற்களை நீக்கி தமிழில் மீட்க முயன்றது தனித்தமிழ் இயக்கம், மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர் போன்றோர் முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கம் பெரிதும் புலவர்கள் இறுக்கமாகவே இருந்தது. ஆனால் தமிழ்ச் சமூகத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப தனித்தமிழ்ச் சொற்களைப் படைத்து, அதை மேடையில் பேசி, பிறகு, அதை மேடையில் பேசி, பிறகு பேச்சு மொழியாகவும் ஆக்கியது திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் அந்த சாதனை பயணத்தை தொடங்கியவர் அண்ணா. பஞ்சாயத்து சமிதி என்ற சொல் ஊராட்சி ஒன்றியம் ஆனதும் காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும் மந்திரி அமைச்சர் ஆனதும் அகிரசேனர் அவைத் தலைவர் ஆனதும் சட்டசபை சட்டப்பேரவை ஆனதும் அண்ணா தொடங்கிய பேச்சு மொழி புரட்சி செய்த சில வேதி வினைகளை. 

அரசியல் வானில் அண்ணா கொண்டு வந்தது வெறும் பேச்சு மாற்றம் அல்ல, அது மிகப்பெரிய அரசியல் பிரிவை நோக்கிய பயணம். அதன் திசையோடு உடன் பட்டவர்களும் மாறுபட்டவர்களும் உண்டு என்பது வேறு கதை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் மேடைப் பேச்சு பழங்கால பேசி போல ஒலிக்கத் தொடங்கியது, பழங்கால சொற்களை உண்மைகளை, உருவகங்களை பயன்படுத்தத் தொடங்கியது ஆனால் இவையெல்லாம் நவீன ஜனநாயக அரசியலை பேசுவதற்காகவே பயன்பட்டன. வேறு சொற்களில் கூறுவது ஆனால், தமிழர்கள் தங்களை ஒரு நாடாக, ஒரு மக்களாக, பொதுமக்கள் திரளாக, ஒரு அரசியல், பொருளாதாரம், மிக பெரிய அளவில் இவை அனைத்துமாக நினைக்கத் தொடங்கினர். இப்படி அவர்கள் புதிதாக ஒன்றைச் செய்ய முயன்ற போது அவர்களது பழைய விஷயங்கள் மேலெழுந்து வந்தன என தமிழ் மேடைப் பேச்சும் திராவிட அரசியலும் என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார் இயல் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் பெர்னாட் பேட். அதாவது மேடைப்பேச்சில் செந்தமிழை கொண்டு வந்த திராவிட அரசியல், அதை பழமையை நோக்கி கொண்டு செல்வதற்காக செய்யவில்லை நவீன ஜனநாயக அரசியலுக்காக அதை  செய்தது.  புதிதாக, ஒரு சமூகமாக,  சமூக நாடாக, பொருளாதார அமைப்பாக, தங்களை நினைக்க  தொடங்கிய நிலையில், அந்த அரசியலை பேசுவதற்காகவே, பழைய மொழியை மீட்டெடுத்து அவர்கள் பயன்படுத்தினர். இப்படி பழமையான செம்மொழியை மீட்டெடுத்து, அதை புதிய அரசியலுக்கு பயன்படுத்தும் அசகாய சூரத்தனம் திராவிட அரசியலுக்கு கொடையாக அளித்து வேறுயாருமல்ல ,அண்ணாதான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Nagargal - A community's History Purposely Rewritten? Massacre Continues.