Posts
Showing posts from September, 2023
பாவாணர் - திராவிடம்
- Get link
- X
- Other Apps
கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது உண்மையல்ல ! திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல், பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனப் பட்டியலிடுகிறார். யாரெல்லாம் சூத்திரர் என மனு சாஸ்த்திரம் கூற வரும்போது: மனுதர்மம் பத்தாவது அத்தியாயம், -சுலோகம் 43-ல் பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள். சுலோகம் 44ல் பௌண்டரம் ஔண்டரம் திரவிடம் காம்போசம் யவ நம் சகம் பாரதம் பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது! கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவர் “எவ்வினையும் ஓப்புதலால...
திராவிடம், தமிழ்நாடு பெயர் குறித்து தந்தை பெரியார்
- Get link
- X
- Other Apps
1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு “தமிழ் நாடு ” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.
அதானி வளர்ச்சி - ஓர் அலசல்
- Get link
- X
- Other Apps
அதானியின் கற்பனையில் உருவான செல்வம் அவரது உண்மையான செல்வத்தை உருவாக்கியது. அதானி தனது பங்கு விலையை முறைகேடான முறையில் உயர்த்தினார், இது அவரது நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை அதிகரித்தது, இது அவரது நிறுவனங்களை பெரிய கடன்களுக்கு தகுதியுடையதாக மாற்றியது. அதானியின் சொத்து அதிகரிப்பை 2014-ல் இருந்து கணக்கிடக்கூடாது, மாறாக நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்ட 13/09/2013 அன்றோ அல்லது மோடி முதல்வர் ஆனதில் இருந்தோ கணக்கிடப்பட வேண்டும். மோடி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நாள் வரை அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சுமார் 85 மடங்கு உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2.65 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அதானி இந்தியாவில் 22 வது இடத்தில் இருந்தார், மேலும் 2014 ஆம் ஆண்டில் அவர் 7.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 11 வது இடத்தைப் பிடித்தார். அவரது அனைத்து நிறுவனங்களின் லாபமும் எகிறவில்லை, ஆனால் பங்குகளின் விலை உயர்ந்துவிட்டன, இது நிறுவனத்தின் மதிப்பீட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது நிறுவனங்களுக்கு லாபத்திற்...