அத்வைதம், விஷிஸ்டாத்வைதம், துவைதம்
அத்வைதம், விஷிஸ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்றுமே வேதாந்தத்தின் பிரிவுகளாக அமையும் மெய்யியல் என்பர்.
துவைத மதத்தின் நிறுவனர் மத்வர். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தவர். இது விஜயநகர பேரரசு ஆட்சி காலம்.
பிரம்மம், பிரபஞ்சம், ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். இறுதி நிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற கொள்கையையும் அது ஏற்பதில்லை. பிரம்மம் நாம் காணும், அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை.
இவர் வழி வந்தவர்கள் தான் ஸ்ரீராகவேந்திரர், ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், ஸ்ரீசுதீந்திர தீர்த்தரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர். விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் ஸ்ரீவிஜயீந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வைதம் மதத்தின் நிறுவனர் ஆதிசங்கரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் (சோழர்கள் ஆட்சி காலம்) கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு (களப்பிரர் காலம்) எனவும் ஒரு வாதம் இருக்கிறது.
‘அத்வைதம்’ என்பதன் பொருள், ‘இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல, ஒன்றே’ என்பதாம். பரம்பொருளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவு என்ன?பரமாத்மா என்பதும் ஜீவாத்மா என்பதும் வேறு வேறு என துவைதம் கூறுகிறது. இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்கிறது அத்வைதம்.
விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் ஸ்ரீ பெரும்புதூரில் பதினோராம் நூற்றாண்டில் (சோழர்கள் ஆட்சி காலம்), சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார்.
இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம் (துவைதம் அற்ற நிலை), (இரண்டற்ற ஒருமை நிலை)
நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, மழை நமக்குள், நம்மால் இயங்குவது இல்லை, - என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம்.
இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம். (செவ்விருமை). இறுதி நிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதக் கொள்கை.
Comments
Post a Comment