யார் தமிழன்

சிவனை ருத்ரன் ஆக்கி 
சைவத்தை வைணவம் ஆக்கி 
மாரியம்மனை துர்க்கை ஆக்கி 
முருகனை சுப்பிரமணியன் ஆக்கி 
விஷ்ணுவை பெருமாள் ஆக்கி 
கண்ணனை கிருஷ்ணன் ஆக்கி பரதநாட்டியத்தை கர்நாடக சங்கீதம் ஆக்கி சமணத்தை ஜெயின மாக்கி 
கோவில்களை வியாபார மையமாக்கி 
தேவியை அம்பாள் ஆக்கி விஷ்ணுவை திருமாலாக கண்ணனாக கிருஷ்ணனாக ராமனாக குழப்பி 
வால் இல்லாத மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் வால் உடைய அனுமார் குரங்கு முகம் கொண்டு வாழ்ந்த மனிதன் அனுமான் என்ற செயற்கை கதாபாத்திரத்தைப் படைத்து 
ராவணியத்தை ராமாயணம் ஆக்கி 
பத்து கலைகளில் சிறந்தவன் ஆகிய ராவணனை பத்து தலை அசுரன் ஆக்கி 

இவையெல்லாம் செய்தது யூத பிராமணர்

தமிழ்நாட்டை எந்தத் தமிழனும் ஆளக்கூடாது என்ற குறிக்கோளில்  கன்னடர்கள் பிராமணர்கள் தெலுங்கர்கள்  தமிழ்நாட்டுஅரசியலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு இன்று யார் தமிழன் என்று கேட்கும் அவல நிலையில் தமிழர்கள் நாம் உள்ளோம் 

வானூர்தி இல்லாத காலத்திலும் கடல்வழி மார்க்கமாக உலகத்தை ஆண்ட இனம் தமிழ் இனம் என்பதையும் மறந்து இன்று அடிமைகளாக உலகெங்கிலும் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலையை எத்தனை தமிழர்கள் நாம் உணர்ந்துள்ளோம்

வான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவை சயன கோலத்தில் பாற்கடலில் உறங்கும் கடவுள் என கேவல்படுத்தியதும் இதே யூத பிராமணர்கள் 

உலகத்தின் முதல் பஞ்சாங்கத்தை விஷ்ணு தான் படைத்தார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன .

அதுவே இன்றளவும் விஷ்ணு பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது

அவர் வான் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக படுத்துக் கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார் இதை கேவலப்படுத்தியது இதே யூத பிராமணர்

உலக மக்களின் பார்வை படும மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி

மொத்தத்தில் மயானம் 

கருணாநிதி சமாதியில், ராமசாமி நாயக்கர் சிலையென்று

எங்கே அந்த 
ராஜராஜ சோழன் சிலை ? 
சூர்யவர்மன் சிலை?
குலோத்துங்கன் நினைவிடம் எங்கே போனது சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.?
கரிகால சோழனின் சிலை?
வேலுநாச்சியார் சிலை ?
சேரன் செங்குட்டுவனின் சிலை ?

எங்கு பார்த்தாலும்
அண்ணா அறிவாலயம் அண்ணாநகர், அண்ணா சாலை, அண்ணா சிலை பெரியார் மண்டபம் பெரியார் பேருந்து நிலையம் பெரியார் சாலை , பெரியார் சிலை கலைஞர் கருணாநிதி நகர். கருணாநிதி சிலை, எம்ஜிஆர் மணிமண்டபம், எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர் எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை எம்ஜிஆர் சிலை

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை, நினைவு கட்டிடங்களும் இல்லை. அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லை

இடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணை கழிசடைகளின் வரலாறும் பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே! 

கரிகாலன் கட்டிய கல்லணை இன்றுவரை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்து உலகின் பல நாடுகளை வென்று மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய ராஜேந்திர சோழனை பற்றி இங்கே கற்பிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான் அந்தக் கோவிலைக் கட்டியவன் யாரென்று கூடத் தெரியாமல் அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப் பாராட்டி நாம் அல்லவா அவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.?

பசுவுக்காக தன் மகனையே கொன்ற சோழனின் கல்லறை எங்கே..

கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டிய நம் ரஜபுதன ராஜாக்களின் வரலாறு எங்கே

தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்து தெற்காசியாவை ஆண்ட நம் ராஜ ராஜ சோழனின் கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?

இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும், காமராஜரும்.

கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.

காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டனர்.

ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதி தலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.

மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும் 
இன்றும், முதல் மரியாதை 
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு தமிழர்களுக்கு எப்படி இல்லாமல் போனது

1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்...

2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி..

3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது...

4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு...

5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய் ..
35 மார்க் எடுத்தவன் ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..

 கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,

கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,

கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது, 

ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது

தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது

 உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது

முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாது

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !

இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன

காஞ்சிபுரத்தில் வாழும் நாம் எத்தனை பேருக்குப் எத்தனை பல்லவ மன்னர்களை தெரியும் அவர்கள் சரித்திரம் எங்கே பல்லவர்கள் கட்டிய கோவில்கள் இல்லை என்றால் இன்று பல்லவ பாண்டியனையும் சோழனையும் எப்போதோ மறந்திருப்போம் காஞ்சியிலிருந்து சென்ற ஒரு வணிகர் மகானாய் உருமாறி போதிதர்மர் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதனை ஏழாம் அறிவில் தான் பலரும் அறிந்து கொண்டோம் ஒரு தனி மதத்தையே சீனாவில் உதித்தவர் என்றால் அவரைப் போன்று எத்தனை மகான்கள் இந்த காஞ்சி மாநகர் கண்டிருக்கும் அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் எங்கே?

இதற்கெல்லாம் யார் காரணம் யூத பிராமணனும் அவனுக்கு பின்னால் நம்முடனே கூடிநின்ற உறவாடிக் கெடுத்த திராவிட கட்சிகளும் தான்

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?

ARAVA NADU - ETYMOLOGY