ரொட்டிக்காகவும் காசுக்காகவும் மதம் மாறினார்கள்
1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம், ஒடுக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறார். அவருக்கு தருபவர் நீண்ட மூங்கில் தண்டின் மேல் புறத்தில் தண்ணீர் ஊற்ற கீழே வழியும் நீரைக் குடிக்கவேண்டும்.
அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் எந்த கிணற்றிலும் போய் தண்ணீர் எடுக்க முடியாது, குளத்தில் இறங்கி குளிக்க முடியாது, அடிபம்ப் என்பது எங்குமே இல்லை. அப்படி என்றால் குடிக்க தண்ணீர் எடுக்க என்ன செய்யவேண்டும்.
இதற்கு தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று புலன்விசாரணை செய்யும் முன்பு உஜ்ஜைனின் 1922-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதிவில் இருந்து “உஜ்ஜைனில் உயர்ஜாதியினரின் கழிவு நீர் தேங்கும் குழிக்கு அருகே ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது, அந்தக்குழியில் ஊற்று நீர்(கழிவு தொட்டியில் இருந்து வரும் நீர்) நிரம்பும் வரை காத்திருந்து பானைகளில் பிடித்துச் செல்கிறார்கள்.
இந்த அழுக்கு நீரை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களின் குழந்தைகள் நோயுள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க டில்லியில் இருந்து கவர்னர் வேண்டுகோள் விடுத்தும் இந்த நாட்டின் (உஜ்ஜைன் ஆங்கிலேயரின் ஆளுமைகுட்பட்ட பகுதி அல்ல) தலைவர் மத சூத்திரத்தின் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்துவிடுகிறார். மனம் வேதனைப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
Comments
Post a Comment