Posts

Showing posts from March, 2021

யார் தமிழன்

சிவனை ருத்ரன் ஆக்கி  சைவத்தை வைணவம் ஆக்கி  மாரியம்மனை துர்க்கை ஆக்கி  முருகனை சுப்பிரமணியன் ஆக்கி  விஷ்ணுவை பெருமாள் ஆக்கி  கண்ணனை கிருஷ்ணன் ஆக்கி பரதநாட்டியத்தை கர்நாடக சங்கீதம் ஆக்கி சமணத்தை ஜெயின மாக்கி  கோவில்களை வியாபார மையமாக்கி  தேவியை அம்பாள் ஆக்கி விஷ்ணுவை திருமாலாக கண்ணனாக கிருஷ்ணனாக ராமனாக குழப்பி  வால் இல்லாத மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் வால் உடைய அனுமார் குரங்கு முகம் கொண்டு வாழ்ந்த மனிதன் அனுமான் என்ற செயற்கை கதாபாத்திரத்தைப் படைத்து  ராவணியத்தை ராமாயணம் ஆக்கி  பத்து கலைகளில் சிறந்தவன் ஆகிய ராவணனை பத்து தலை அசுரன் ஆக்கி  இவையெல்லாம் செய்தது யூத பிராமணர் தமிழ்நாட்டை எந்தத் தமிழனும் ஆளக்கூடாது என்ற குறிக்கோளில்  கன்னடர்கள் பிராமணர்கள் தெலுங்கர்கள்  தமிழ்நாட்டுஅரசியலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு இன்று யார் தமிழன் என்று கேட்கும் அவல நிலையில் தமிழர்கள் நாம் உள்ளோம்  வானூர்தி இல்லாத காலத்திலும் கடல்வழி மார்க்கமாக உலகத்தை ஆண்ட இனம் தமிழ் இனம் என்பதையும் மறந்து இன்று அடிமைகளாக உலகெங்கிலும் தமிழர்கள்...

ரொட்டிக்காகவும் காசுக்காகவும் மதம் மாறினார்கள்

Image
1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம், ஒடுக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறார். அவருக்கு தருபவர் நீண்ட மூங்கில் தண்டின் மேல் புறத்தில் தண்ணீர் ஊற்ற கீழே வழியும் நீரைக் குடிக்கவேண்டும்.    அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் எந்த கிணற்றிலும் போய் தண்ணீர் எடுக்க முடியாது, குளத்தில் இறங்கி குளிக்க முடியாது, அடிபம்ப் என்பது எங்குமே இல்லை. அப்படி என்றால் குடிக்க தண்ணீர் எடுக்க என்ன செய்யவேண்டும்.    இதற்கு தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று புலன்விசாரணை செய்யும் முன்பு உஜ்ஜைனின் 1922-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதிவில் இருந்து “உஜ்ஜைனில் உயர்ஜாதியினரின் கழிவு நீர் தேங்கும் குழிக்கு அருகே ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது, அந்தக்குழியில் ஊற்று நீர்(கழிவு தொட்டியில் இருந்து வரும் நீர்) நிரம்பும் வரை காத்திருந்து பானைகளில் பிடித்துச் செல்கிறார்கள். இந்த அழுக்கு நீரை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களின் குழந்தைகள் நோயுள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க டில்லியில் இருந்து கவர்னர் வேண்டு...

ராமன் ஏக பத்தினி விரதனா?

தொகுப்பின்   மூலம்  :- இந்து மதத்தில் புதிர்கள்  -  டாக்டர்   அம்பேத்கர் இராமாயணம்   ஓர்   ஆய்வு . கே . முத்தையா இராமயணப்   பேருரைகள் .- மகாகணம்   வி . எஸ் . சீனிவாச   சாஸ்திரியார் கடவுள் இராமனைப் பற்றி தலைவர்கள் என்ன சொன்னார்கள் ? ' என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல " -   மகாத்மா காந்தி . ' இராமாயணம் ,  மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல " -  ஜவஹர்லால் நேரு . ' இராமன் கடவுளல்ல .  அவன் ஒரு கதாநாயகன் !" - இராஜகோபாலாச்சாரியார் . ' இராமயணம் தெயவத்தின் கதை அல்ல .  அது ஓர் இலக்கியம் ."   கலியுக கம்பன் டி . கே . சிதம்பரநாத முதலியார் . இராமன் ‘ ஏக பத்தினி விரதன் ’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது . இத்தகையதொரு புரிதல்  எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது . வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் ( அயோத்தியா காண்டம் , சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான் . சரி...