இது அரசியல் பதிவல்ல ஆதங்க பதிவு
2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு..!
மொத்தம் 5,150 கோடி அரசு கஜானா காலி
2,500 ரூபாய் பணம் நிச்சயமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த சமயத்தில் பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
ஆனால் இந்த 2,500 கொடுக்காவிட்டாலும் அவர்கள் பொங்கல் கொண்டாட தான் போகிறார்கள்,
பணம் இல்லையே என்று எதுவும் நின்றுவிடப்போவதில்லை..
ஆனால் அரசாங்கம் 5,150 கோடி ரூபாய் செலவழிக்கிற நிலையில் இப்போது இருக்கிறதா.?
என்பதே கேள்வி..?
58 வயதில் ஓய்வு பெற வேண்டிய அரசு ஊழியர்களுக்கு ரிட்டையர்ட்மெண்ட் பணம் கொடுக்க வழி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 59 என ஆக்கியது தமிழ்நாடு அரசு..
5,150 கோடி இருந்தால் அத்தனை பேருக்கும் ஓய்வு கொடுத்துருக்கலாம்..
அடுத்து,
வளர்ச்சிப்பணிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி முதல் அனைத்து பணிகளுக்குமான நிதியையும் குறைத்தாகி விட்டது
(ஒரு சில அதிக கமிஷன் கிடைக்கும் பணிகள் தவிர..)
5,150 கோடி இருந்தால் வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை குறைக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது..
அடுத்து,
அரசாங்கத்தில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து வேலைசெய்த ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 6 மாதங்களுக்கு மேல் பாக்கி..
சில துறைகளில் ஒரு வருடங்களுக்கு மேல் பாக்கி..
இதனால் பல ஒப்பந்ததாரர்கள் பணம் இல்லாமல் மேற்கொண்டு பணிகளை தொடர முடியாமல் திணறல்..
(ஒப்பந்ததார்ரகள் என்றால் சேகர் ரெட்டி போல பெரிய பண முதலாளிகள் அல்ல, அவர்களை போன்றவர்கள் கமிஷன் கொடுத்து உடனுகுடன் பணம் வாங்கிவிடுவார்கள்,
நாம் சொல்வது சிறிய சிறிய ஒப்பந்ததாரர்கள்..)
5,150 கோடி இருந்தால் ஓரளவுக்கு அவர்களுக்கான நிலுவைத்தொகையை செட்டில் செய்து விடலாம்..
இவையெல்லவற்றையும் விட தமிழ்நாடு அரசு ஏற்கனவே 4,50,000 கோடி வரை கடனில் இருக்கிறது,
இந்த நிதியாண்டிலும் கூட சுமார் 50,000 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன,
இப்படி கடன் வாங்கி கொடுக்கிற அளவுக்கு 2,500 ரூபாய் மக்களுக்கு முக்கியமா என்றால் நிச்சயமாக இல்லை..
பணம் கொடுக்காவிட்டாலும் மக்களால் சமாளிக்க முடியும்..
அப்படி கண்டிப்பாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் நினைத்தால்..
ஒரு பழமொழி சொல்வார்களே,
தினமும் ஒருவருக்கு மீன் சாப்பாடு கொடுப்பதை விட,
அவருக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பார்கள்..
அதன்படி இந்த 5,150 கோடியிலே ஒரு பத்து தொழிற்சாலை கட்டி கொடுத்திருக்கலாமே..
ஒரு தொழிற்சாலைக்கு பத்தாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்,
பத்து தொழிற்சாலை என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமே..
இதெல்லாம் செய்தால் யார் ஓட்டு போடுவார்கள்..?
குடும்பத்துக்கு 2,500 ரூபாய் கொடுத்தாலவது ஓட்டு கிடைக்கும்..
இப்படி ஒரு நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது..
ஒருசில மக்களும் இந்த இலவசங்களை
எதிர்பார்க்கிறார்கள்..
ஆனால் எல்லா மக்களும் இதை வரவேற்கிறார்கள் என எடுத்துக்கொள்ள வேண்டாம்..
பொதுநலமாக சிந்திப்பவர்கள்,
நாட்டு நலன் மீது நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் இந்த இலவசங்களுக்கு எதிராக குமுறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் காலம் காலமாக,
மக்களிடம் எத்தனை கெடுபிடிகள் செய்து வரிவசூல் செய்கின்றன மத்திய மாநில அரசுகள்..
எத்தனை பேர் வேறு வழியில்லாமல் குமுறிக்கொண்டு வரிகள் செலுத்துகின்றனர்..
அப்படி பெறப்பட்ட பணத்தை வைத்து இந்த நாட்டு முன்னேற்றத்திற்காக செலவிட வேண்டாமா.? இந்த மத்திய மாநில அரசுகள்..
ஓட்டுக்காகவும், கமிஷனுக்காகவும் மட்டுமே செலவழிக்கும் போது முறையாக வரி செலுத்துபவர்களுக்கு குமுறல் இருக்கத்தானே செய்யும்...
இப்படி இலவசங்களை வாரி வழங்குவதால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இப்போ மகிழ்ச்சியாக தான் தெரியும்..
ஆனால்,
நடைமுறை வாழ்க்கையில் இதற்கான பாதிப்பு அவர்களுக்கும் உண்டு..
உதாரணமாக,
ஒரு பேரூராட்சி பகுதியில் ஒரு செண்ட் நிலம் வாங்கி ஒரு ஏழை எளிய அல்லது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வீடுகட்ட நினைக்கிறார் என வைத்துக்கொள்வோம்..
அவர் அந்த ஒரு செண்ட் நிலத்தை வாங்க முத்திரைத்தாள் பதிவுக்கட்டணமாகவே 25,000 முதல் 30,000 வரை செலுத்த வேண்டி உள்ளது..
3 செண்ட் இடம் வாங்கினால் தான் உருப்படியான ஒரு வீடுகட்ட முடியும்..
அப்படியானால் 3 செண்ட் நிலம் வாங்கவே அவர் 75,000 முதல் 90,000 வரை பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும்..
அப்போ யோசிப்பார் அவர்..
அடப்பாவிகளா..?
2,500 ரூபாய் கொடுத்துட்டு இப்படி ஒரு லட்சத்தை ஆட்டைய போட்டுட்டீங்களேன்னு..
இப்படி எல்லா தரப்பு மக்களும் தான் அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள்..
பணக்காரர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்கள் என எண்ண வேண்டாம்..
நாம வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் நாம தான் GST கட்டுரோம்..
ஆகையால் வரிகட்டாதவர்கள் என்று ஒரு நாட்டில் எவரும் இருக்க முடியாது..
இப்படி மக்களிடம் கெடுபிடி செய்து பெற்ற பணத்தை முறையாக செலவழிக்க தெர்லயே என ஆதங்கப்பட்டால் நீங்கள் ஒரு பொதுநலவாதி..
2,500 ரூபாய் வழங்கிய வள்ளலே என நீங்கள் போற்றிப்புகழ்ந்தால்..
நாட்டு வளர்ச்சி மீது அக்கறை இல்லாமல் அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்ளாத சாதாரண மனிதராக தான் நீங்கள் கருதப்படுவீர்கள்..
🚶🚶🚶என புலம்பிக்கொண்டே அந்த 2,500 ரூபாய்க்கான டோக்கனை பெற நடையைகட்டினார் இந்த இந்த நடுத்தரக் குடும்பவாதி
🤣😇🤣😇🤣😇🤣😇
Comments
Post a Comment