E-Myth Revisited


 The E-Myth Revisited eBook by Michael E. Gerber - 9780061741654 ...
நண்பர்களே E-Myth revisited அப்படின்னு ஒரு book படித்தேன், ரொம்ப interestinga இருந்துச்சு. எதை பத்தினா, ஏன் startup மற்றும் புதுசா biz துவங்கிறவங்க mostly fail ஆகுறாங்கன்ற பத்தி. அதிலிருந்த கருத்துக்களை இங்கே share பண்ணுகிறேன்.

நீங்க ஒரு small biz owner ஆக இருந்தால், உங்க business அடுத்த level க்கு எடுத்து செல்வது எப்படின்னு  இந்த புக்கை படிச்சி தெரிந்துகொள்ளலாம்.

business ல மொத்தம் 3 stage இருக்கு.

1.infancy stage
2. adolescence stage
3. Maturity stage


இந்த bookla author சாரா என்கின்ற ஒரு பெண்மணி.  அவங்க செய்ற biz எப்படி ஒரு level இருந்து இன்னொரு levelக்கு எடுத்து செல்வது என்பதை சொல்லி தருகிறார்.

  1. Infancy Stage

சாரா ஒரு பெரிய கேக் செய்ற கம்பெனில வேலை செய்கிறார்.
அவர் கேக் நல்லா டேஸ்ட்டா செய்வதால், customers எல்லோரும் அவரை பாராட்டுகிறார்கள். தீடிரென்று, ஒரு நாள் சாரா, நாம் தான் நன்றாக cake செய்கிறோமே, ஏன் நாம சொந்தமா செஞ்சி biz செய்ய ஆரம்பிக்க கூடாதுன்னு நெனைக்கிறாங்க.

அது மட்டும் இல்லாம இந்த கம்பெனில விக்கிற கேக் அப்படி ஒன்னும் சுவையாக இல்லை, மேலும் ரொம்ப விலை அதிகமா விற்கிறார்கள், நாம் ஏன் விலை குறைவாக, அல்லது நியாமான விலைக்கு, டேஸ்ட் இன்னும் சுவையாக செஞ்சி விக்க கூடாதுன்னு நெனைக்கிறாங்க. அப்படியே biz செய்ய துவங்கிறாங்க.

ஆரம்பத்தில் அவங்க தனியா கேக் செய்து, விக்க முயற்சி பண்றாங்க , நல்ல சுவையாக இருந்தாலும், புதிய கடையாக இருப்பதால் யாரும் அவ்வளவாக வாங்க வரவில்லை, மெதுவாக, ஒன்று ரெண்டு பேர் வந்து வாங்கி, நன்றாக இருக்கிறது என்று பாராட்டி, அவங்க word of mouth மூலமாக இன்னும் கொஞ்சம் பேர் வருகிறார்கள்.

அப்போதான் சாரா marketing எவ்வளவு முக்கியம்ன்னு உணர்கிறார்கள். அப்புறம் marketingகின என்னன்னு தெரிந்துகொண்டு, எப்படி மார்க்கெட்டிங் பண்ணுவது என்பதையும் கற்று உணர்ந்து, முதலில் சுலபமான மார்க்கெட்டிங் techniqueகான social மார்க்கெட்டிங் மூலம் அவங்க கேக்கை விற்க முயற்சி பண்ணுகிறார்கள், facebook , twitter மற்றும் social மீடியா மூலம் மார்க்கெட்டிங் பண்றாங்க. நல்ல ரிசல்ட் வந்தது, கொஞ்சம் பேர் வர ஆரம்பித்தார்கள்

இதனால் சாராரெண்டு மடங்கு கஷ்டப்பட்டுமார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சாங்க சோசியல் மீடியா மூலமாக,  எல்லா வழியிலும் அவங்களால் முடிஞ்ச அளவுக்கு மார்க்கெட்டிங் பண்ணாங்கஇந்த மாதிரி மார்க்கெட்டிங் பண்ணியதால்கொஞ்ச மாசத்துக்கு அப்புறம் நிறைய கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்கஇப்ப நிறைய கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க ஆனா இப்ப ஒரு புது பிராப்ளம் வந்துருச்சுஎல்லாமே தனியா அவங்களாலே handle பண்ண முடியலpayment வாங்குவதுclean பண்றதுகேக் பண்றது எல்லாமே அவங்களே தனியாக பண்ணுவதால், அவங்களால்  எல்லாமே சரியாக பண்ண முடியலஇதனால் சாரா நிறைய கால்குலேஷன் போட்டுநிறைய வருமானம் வருதுன்னு தெரிஞ்சது.  அப்போ இன்னொரு employee recruit பண்ணா சுலபாக இருக்கும் என்று நெனைக்கிறார்அப்படி எடுத்தால்அவங்களுக்கு கேக் செய்வது எப்படின்னு சொல்லிக்கொடுத்து விட்டுநாம் இன்னும் தீவீரமாக மார்க்கெட்டிங் செய்யலாம்கேஷ் கவுண்டர் பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்நிறைய think பண்ணி calculate பண்ணிநிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துகொண்டு ஒரு employee recruit பண்ணிக்கிட்டாங்கஇப்ப எல்லாமே சரியா இருக்கும்ன்னு நினைச்சாங்க , ஆனா அதுக்கு பதிலா எல்லாமே இன்னும் complicate ஆகிடுச்சு, problem என்னென்னாபுதுசா வந்த employee ரொம்ப lazyயா இருந்தாங்கசொல்லி கொடுக்கிறதை சரியா கத்துக்கலைடேஸ்ட் வரலை. customers complain பண்ண ஆரம்பிச்சாங்கசாரா வந்து கவுண்டர்ல உக்காந்திருந்தாங்க, accounts & Marketing எல்லாமே பார்த்துட்டு இருந்தாங்க. customer complaint வந்த பிறகு அந்த employee வேலை விட்டு நிறுத்திட்டாங்கமறுபடியும் அவங்களே எல்லாத்தையும் handle பண்ண ஆரம்பிச்சாங்க.

இதுதான் இனபானசி ஸ்டேஜ்இது மாதிரி தான் புதுசா biz பண்றவங்க பிரச்சனை face பண்ண ஆரம்பிக்கறாங்கஉலகத்தில முதல ஆரம்பிக்கிற biz எல்லாமே ஆரம்பிச்ச 18 மாசத்துலே close பண்ணிடறாங்க . 

இதுல என்ன பிரச்சனைனாஎல்லா பிசினெஸ்ளையும் 3 லெவல் quality people இருப்பாங்க

1. Entrepreneur
Entrepreneur யாருண்ணாஒரு கம்பெனியோட vision mission goals செட் பண்றவரா இருப்பார்அந்த business வழி நடத்துபவராக இருப்பார்அவர் set பண்ற goals படிதான் அந்த கம்பெனி move ஆகும்
2. Manager
மேனேஜர் என்பவர்அந்த biz, set பண்ணி இருக்கிற goals achieve பண்ண வைப்பவராக இருப்பார்சரியாக நடக்கிறதா என்று supervise பண்ணுவார்அவரே எத்தனை employee இருக்க வேண்டும்என்ன என்ன திறமை வேண்டும் என்று சோதித்து பார்த்து employee correct ஆக recruit பண்ணுவார்யார் தேவையார் தேவை இல்லை என்று அவரே முடிவு செய்வார்அதற்கான அறிவும்தெளிவும்அனுபவமும் அவருக்கு இருத்தல் அவசியம்.

3. Technician
Technician என்பவர்தான் இங்கே employee ஆக மேனேஜரால் recruit செய்யப்படுபவர்அவர் கொடுக்க பட்ட வேலையை செய்துவிட்டுஅதற்கு ஏற்ப சம்பளம் பெற்றுக்கொள்பவராக இருப்பார்

மேற் சொன்ன கதையில்சாரா ஒரு technician, அவங்க என்ன நினைச்சாங்கதனக்கு நல்லா கேக் செய்ய தெரிஞ்சதாலே நாமும், biz ஆரம்பிச்சாசக்ஸஸ் ஆகிடலாம்னு assume பண்ணிக்கறாங்க.

நல்ல டெக்னிசியானான சாராவிற்குமேனேஜ்மென்ட் technique பற்றிய அனுபவம் இல்லாததாலே அவங்களால் சரியான ஆளை வேலைக்கு தெரிவு செய்ய முடியவில்லை.

biz fail ஆகுற entrepreneur முக்கால் வாசி பேர்சாராவை போன்று technician level இல் இருப்பவர்களாக தான் இருப்பார்கள்அல்லது 70% technician, 20% manager, 10% Entrepreneur ஆக இருப்பார்கள்.

ஒரு successful biz எடுத்து பார்த்தோம் என்றால், biz owners மேலே குறிப்பிட்டுள்ள மூன்று qualities சம அளவாக பெற்றவர்களாக இருப்பார்கள்இது மிக மிக முக்கியம்

அடுத்தது

  1. Adolescence stage
மறுபடியும் சாரா அவங்களோட கேக் ருசியாக இருந்ததாலும், சோசியல் மார்க்கெட்டிங் மூலமாக மக்களுக்கு நெறய அவங்க கடையை பற்றி தெரிந்து கொண்டதாலும் நிறைய customers வர ஆரம்பிச்சாங்க. ஏற்கனவே நடந்த தவறு (wrong employee) காரணமாக , இப்போ நெறய customers வந்துவிட்டதால் அவங்களால் தனியாக handle பண்ண முடியலஇப்போ, வேலைக்கு ஆள் எடுக்காம, partnership தேட ஆரம்பிச்சாங்கஒரு நல்ல பார்ட்னர் வந்தார்அவரும் சாரா மாதிரியே  கடுமையா உழைத்தார்நெறய customers வர ஆரம்பிச்சாங்க , இடம் பத்தலை ஆகையால் பெரிய இடத்திற்கு மாறினார்கள்இடம் பெரிசா ஆகியதால்இன்னும் நெறய customers வர ஆரம்பிச்சாங்கஅப்போ இன்னும் ரெண்டு மூணு  employee எடுக்க ஆரம்பிச்சாங்கபுதுசா வந்த பார்ட்னர் நியூ recruitment பார்த்து கொண்டார்வேலையை பகிர்ந்துகொண்டார்கள்.

இதிலும் ரெண்டு பெரிய தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது

1. bills , rental, salary, வங்கி கடன் மற்றும் இதர செலவுகள் போக, partners ஷேர் கொடுத்த பின்னர் அவங்க சாம்பாரித்ததுமிக குறைவாக இருந்ததுவேலை செய்யும் போது கிடைத்த சம்பளம்அதில் இருந்த நிம்மதிஇது எதுவும் இதுல இல்லையோ அப்படினு தோணுச்சுகடைசில வேண்டாம் நாம மறுபடியும் வேலைக்கே போகலாம் அப்படின்னு நெனச்சி biz close பண்ணிடுவாங்க.

அல்லது

biz partnership பிரச்சனை வந்து, partners பிரிந்து மறுபடியும் முதல் stage ஆனா infancy stage கே பிரித்து கொண்டு போய் விடுவார்கள்மறுபடியும்அவர்களே தனியாக எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிப்பார்கள்ஆனால் இப்போது, customers அண்ட் commitments அதிகம் இருப்பதால் அதை சமாளிக்க முடியாமல் திணறிபிறகு fail ஆகி விடுகிறார்கள்

கடைசியாக

 3. Maturity Stage

இதுதான் business la இருக்கிற ultimate stage. இந்த stageக்கு உங்க business plan பண்ணி எடுத்து வந்தாதான் உங்களால business success பண்ண முடியும். இந்த levelதான் பில்லியன் டாலர் கம்பெனி எல்லாம் வருது. 

உங்க பிஸ்னஸ் இந்த மாதிரி பெரிய லெவலுக்கு கொண்டு போகணும்னா  அதுக்கு சில method follow பண்ணனும்.
  1. Think as a franchise
Starting ல இருந்து நம்ம கம்பெனிக்கு long terms plan, short term goals to reach long term plan எல்லாம் set பண்ணுவது ரொம்ப ரொம்ப அவசியம். Franchise business model மாதிரி நம்மளோட business plan பண்ணவேண்டும்
  1. System Dependent
உதாரணத்திற்கு McDonalds ஏன் successful ஆ இருக்குன்னா, அவங்க burger ரொம்ப taste இருக்கிறதுனாலே இல்ல, அவங்க system நல்லா இருக்கிறதுனாலே தான்னு நம்மளே பல பேருக்கு தெரியும். அவங்க system எப்படி இருக்குன்னா ஒரு குழந்தையில் ஆரம்பிச்சி, காலேஜ் ஸ்டுடென்ட், adults, parents , வயசு ஆனவங்கன்னு எல்லோரையும் திருப்தி படுத்தறா மாதிரி இருக்கிறதுனாலதான் McDonalds successful பில்லியன் டாலர் biz ஆக உருவெடுக்க முடிச்சது

அது மட்டும் இல்லாம அவங்க சிஸ்டம் எப்படி இருக்குன்னா காலேஜ் ஸ்டுடென்ட் கூட அதை மேனேஜ் பண்ற மாதிரி அவங்க சிஸ்டம் அவ்வளவு தெளிவா கிளியரா இருக்கு. பெரிய பெரிய experts  எல்லாம் தேவையே இல்லை. இதனால நமக்கு low skill employee கிடைச்சா கூட நம்ம பிசினஸ் நல்ல போய்கிட்டு இருக்கும்

small biz என்ன ப்ரோப்லேம்ன்னா, அவங்க வந்து people dependent ஆக இருந்துகிட்டே இருப்பாங்க. நல்ல employee தேடிகிட்டே இருப்பாங்க. ஆன சிஸ்டம் create பண்ணிட்டா, உங்க biz system dependent ஆக மாறிவிடும். புதுசா வருகிற employee சிஸ்டம் follow பண்ணிணாவே போதும், biz நன்றாக grow ஆகும்

இன்பேன்ஸி ஸ்டேஜ் ல இருக்கும்போது ஓனர் தான் அந்த சூப்பரான எம்பிளோயேர். எல்லாத்தையும் அவரே செய்வார் எல்லாம் நல்லா போயிட்டு இருக்கோம் ஆனா ஓனர் வேலை செய்வதை நிறுத்தி விட்டார் என்றால்  கம்பெனியும் மூடிடுவாங்க

அப்புறம் Adolescence  ஸ்டேஜ்ல, அவங்களோட employee's  இல்லனா உங்களோட partners தான் அந்த சூப்பர் எம்பிளாய் வேலை செய்வாங்க, அப்புறம் பிரிஞ்சுடுவாங்க . 

இதனால நீங்க உங்க பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணும்போது அது ஒரு ஸிஸ்டம் ஆ பாருங்க எல்லாமே சிஸ்டமேட்டிக் நோட் பண்ணி பண்ணுங்க அப்பதான்  அதை எல்லோரும் எல்லா இடத்துலயும் ஈஸியாக ரெப்ளிகேட் பண்ற மாதிரி பண்ண முடியும் அதாவது எந்த employee's வந்தாலும் அந்த சிஸ்டம் follow பண்ணா மட்டும் போதும், நம்முடைய பிசினஸ் ஓடிக்கிட்டே இருக்கும்

  1. Work on the Business
General ல  நாம எதுக்கு பிசினஸ் பண்றோம்? நம்ம பிசினஸ் கிரியேட் பண்ணி, அது மூலமா நிறைய சம்பாரித்து, நமக்கு தேவையான அளவுல சந்தோசமா, நிறைய free time இருந்துகொண்டு, relax ஆ enjoy பண்ண வேண்டும், வாழ வேண்டும் என்பதால்தானே. ஆனால் நாம் அப்படியா செய்கிறோம். biz biz என்று அதிலேயே மூழ்கி விடுகிறோம். Instead of working on the business, we work for the business, which is totally wrong.

ஆரம்பம் முதலே ஒரு operation manual create செய்து வைத்துக்கொண்டால், எல்லா employee சும் அதை படிச்சி, சுலபமாக புரிந்து கொண்டு, வேலை செய்யவும் முடியும், அதே மாதிரி easy replicate பண்ணவும் முடியும்னு author சொல்கிறார்

இன்னும் பல பயனுள்ள தகவல்கள் நெறய விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் E-Myth Revisited என்கின்ற புக் வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

I have given the essence of the book. And will highly recommend you, especially new biz owners, and existing biz owners who are struggling to take the business to the next level.

As i biz owner myself, i am inspired by reading this book, and i have already started to implement few of the ideas given in this book.

Thank you





Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Nagargal - A community's History Purposely Rewritten? Massacre Continues.