Syama Prasad Mukherjee - பிஜேபியின் தோற்றம்
பிஜேபியின் தோற்றம் 1951 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்கு பதிலளிக்கும் வகையில் சியாமா பிரசாத் முகர்ஜியால் (Syama Prasad Mukherjee) நிறுவப்பட்ட ஜனசங்கம் என்று பிரபலமாக அறியப்படும் பாரதிய ஜனசங்கத்தில் உள்ளது. சியாமா பிரசாத் முகர்ஜி யார்? (Syama Prasad Mukherjee) சியாமா பிரசாத் முகர்ஜி (6 ஜூலை 1901 - 23 ஜூன் 1953) கல்கத்தாவில் 6 ஜூலை 1901 அன்று பெங்காலி பிராமண குடும்பத்தில் பிறந்தார். வங்காளத்தில் முகர்ஜிகள் (Mukherjees), சட்டர்ஜிகள்(Chatterjees), பானர்ஜிகள் (Banerjees), கங்குலிகள் (Gangulys) மற்றும் பட்டாச்சார்ஜிகள் (Bhattacharjees) என அறியப்படும் ஐந்து பிராமண குலங்கள், குலினா ("மேலான/உயர்வான") பிராமணர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வங்காளத்தில் உள்ள மற்ற பிராமணர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். குலினா பிராமணர்கள் பஞ்ச கௌடர் என்று அறியப்படும் உயர் வட இந்தியப் பிராமணர் பிரிவை சேர்ந்தவர்கள். ஆதியில் திராவிடப் பிராமணர்களும் பஞ்ச கௌட பிராமணர்களும் ஒன்றாக இருந்ததாகவும் பிற்காலத்தி பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. முகர்ஜி என்ற இவரது குடும்ப பெயரிலிருந்து சிய...