இது அரசியல் பதிவல்ல ஆதங்க பதிவு
2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு..! மொத்தம் 5,150 கோடி அரசு கஜானா காலி 2,500 ரூபாய் பணம் நிச்சயமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த சமயத்தில் பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால் இந்த 2,500 கொடுக்காவிட்டாலும் அவர்கள் பொங்கல் கொண்டாட தான் போகிறார்கள், பணம் இல்லையே என்று எதுவும் நின்றுவிடப்போவதில்லை.. ஆனால் அரசாங்கம் 5,150 கோடி ரூபாய் செலவழிக்கிற நிலையில் இப்போது இருக்கிறதா.? என்பதே கேள்வி..? 58 வயதில் ஓய்வு பெற வேண்டிய அரசு ஊழியர்களுக்கு ரிட்டையர்ட்மெண்ட் பணம் கொடுக்க வழி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 59 என ஆக்கியது தமிழ்நாடு அரசு.. 5,150 கோடி இருந்தால் அத்தனை பேருக்கும் ஓய்வு கொடுத்துருக்கலாம்.. அடுத்து, வளர்ச்சிப்பணிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி முதல் அனைத்து பணிகளுக்குமான நிதியையும் குறைத்தாகி விட்டது (ஒரு சில அதிக கமிஷன் கிடைக்கும் பணிகள் தவிர..) 5,150 கோடி இருந்தால் வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை குறைக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது.. அடுத்து, அரசாங்கத்தில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து வேலைசெய்த ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவ